ஆண்கள் காபி குடுக்க கூப்டா ஜாக்கிரதை.. அது எனக்கு நல்லா தெரியும் - பூனம் பாஜ்வா சர்ச்சை!

Poonam Bajwa Tamil Cinema Tamil Actress
By Jiyath Nov 07, 2023 03:30 PM GMT
Report

நடிகை பூனம் பாஜ்வா ஆண்கள் குறித்து சர்ச்சையாக பதிவிட்டுள்ளார்.

பூனம் பாஜவா

'சேவல்' என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை பூனம் பாஜ்வா. தொடர்ந்து தெனாவெட்டு, கச்சேரி ஆரம்பம், ஆம்பள, அரண்மனை, முத்தின கத்திரிக்காய் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

ஆண்கள் காபி குடுக்க கூப்டா ஜாக்கிரதை.. அது எனக்கு நல்லா தெரியும் - பூனம் பாஜ்வா சர்ச்சை! | Actress Poonam Bajwa Controversial Post

இறுதியாக இவர் நடிப்பில் வெளியான படம் குருமூர்த்தி. தமிழ் சினிமாவில் அதிக படங்களில் நடிக்க வாய்ப்பில்லாத போதும் பூனம் பாஜ்வா, தனது இன்ஸ்டாகிராமில் அதிக ஆக்டிவாக உள்ளார். இவர் அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். இவரின் புகைப்படங்களுக்கென தனி ரசிகர் கூட்டமே உள்ளது.

சர்ச்சை பதிவு

இந்நிலையில் பூனம் பஜ்வா தனது சமூக வலைதளத்தில் வெளியிட்ட ஒரு பதிவு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதில் "ஆண்கள் பொதுவாக பெண்களிடம் காபி குடிக்க போலாமா என்று கேட்பார்கள்.

ஆண்கள் காபி குடுக்க கூப்டா ஜாக்கிரதை.. அது எனக்கு நல்லா தெரியும் - பூனம் பாஜ்வா சர்ச்சை! | Actress Poonam Bajwa Controversial Post

அவர்கள் அப்படி அழைப்பதில் பல விஷயம் இருக்கு. அது எனக்கு நன்றாகவே தெரியும், அப்படி அவர்கள் அழைத்தால், ஜாக்கிரதையாக இருங்கள்" என்று பூனம் பஜ்வா கூறியுள்ளார். இது தற்போது சர்ச்சையாகி, காபி குடிக்க அழைப்பது ஒரு குற்றமா என ஆண் ரசிகர்கள் இவரை வசைபாடி வருகின்றனர்.