பூஜா ஹெக்டே தற்கொலைக்கு முயன்றாரா? - ரிவீட் அடித்த நடிகை!
நடிகை பூஜா ஹெக்டே தற்கொலை செய்ய முயன்றதாக வெளியான தகவல் வெளியாகியுள்ளது.
பிரபல நடிகை
திரையுலகில் பிரபல நடிகையான பூஜா ஹெக்டே மிஸ்கின் இயக்கத்தில் உருவான முகமூடி என்ற படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார். அதன்பின்னர் இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகளில் நடித்து இதுவரை 15 படங்களில் நடித்துள்ளார்.

சமீபத்தில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் வெளியான பீஸ்ட் படத்தில் விஜய்யுடன் ஜினோடியாக நடித்திருப்பார். அதில் இவரது டான்ஸ் மூலம் பல ரசிகர்களை கவர்ந்தார். அடுத்ததாக, இவர் ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த ஜன கன மன என்ற படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக ஒப்பந்தமாகியுள்ளார்.
தற்கொலை முயற்சி
இந்நிலையில், பிரபல விமர்சகரும், சென்சார் போர்டு உறுப்பினருமான உமர் சந்து, நடிகை பூஜா ஹெக்டே, தொடர்ந்து படங்கள் தோல்வி அடைந்ததால், மன உளைச்சலில் இருந்து வருவதாகவும் அவர் தற்கொலைக்கு முயற்சி செய்ததாகவும் அவரது குடும்பத்தினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்து காப்பாற்றியதாகவும் தனது ட்விட்டரில் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

இந்த தகவல் மிக வேகமாக இணையத்தில் பரவியது, இதற்கு பூஜா ஹெக்டே சார்பில் பொய்யான செய்தியை பரப்பியதற்காக உமர் சந்துக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால் உமர் சந்து அந்த நோட்டிசையும் தனது டுவிட்டரில் பதிவிட்டு உள்ளார். இதனால் ரசிகர்கள் பலர் இவரை திட்டி குவிக்கின்றனர்.
திக்திக் நிமிடங்கள்: பயங்கரத் திட்டத்துடன் இருந்த ஓமன் துணை விமானி - அதிர வைக்கும் பின்னணி IBC Tamil
மரணத்திற்கு அஞ்சாமல் விமானத்தை மோதச் செய்ய விரும்பினேன்: ஃப்ளைதுபாய் துணை விமானி பரபரப்பு வாக்குமூலம் IBC Tamil
எரிபொருள் தேவைப்படுபவர்கள் ஹோர்முஸ் நீரிணைக்கு செல்லுங்கள் : நட்பு நாடுகளுக்கு ட்ரம்ப் அறிவுரை IBC Tamil