அந்தமாதிரி பொண்ணுன்னு சொல்றாங்க; அம்மா இறந்த டைம்ல.. - பவித்ரா லட்சுமி வேதனை!

Tamil Cinema Tamil Actors Tamil Actress Actress
By Jiyath Jan 24, 2024 03:56 PM GMT
Report

தனது தாயாரின் இறப்பு குறித்து நடிகை பவித்ரா லட்சுமி பேசியுள்ளார்.

பவித்ரா லட்சுமி

மாடலிங் மற்றும் குறும்படங்களில் நடித்து பிரபலமானவர் பவித்ரா லட்சுமி. அதன் பிறகு "குக் வித் கோமாளி" நிகழ்ச்சியில் பங்கேற்று ஏராளமான ரசிகர்களை கவர்ந்தார்.

அந்தமாதிரி பொண்ணுன்னு சொல்றாங்க; அம்மா இறந்த டைம்ல.. - பவித்ரா லட்சுமி வேதனை! | Actress Pavithra Lakshmi About Her Mother

பின்னர் நாய் சேகர் என்ற படத்தின் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார். மேலும், யூகி மற்றும் ஜிகிரி தோஸ்த்து ஆகிய படங்களில் நடித்துள்ளார். தற்போது இது காதல்தானே என்ற பாடலை பவித்ரா லட்சுமி எழுதியுள்ளார்.

இந்த பாடல் தொடர்பாக அவர் அளித்த நேர்காணல் ஒன்றில் பேசியதாவது "அம்மா தான் சொல்லிக்கொண்டே இருப்பார் உனக்கு இவ்வளவு ஞாபகம் இருக்கிறது என்றால் தயவு செய்து பாடல்கள் எழுது என்று.

எனக்கு சிறிய வயதில் பாட்டு பாட பெரிதாக வராது. ஆனால் நான் பாடல் பாட வேண்டும் என்று சொல்லி, அதற்கான முயற்சிகளை அம்மா எடுத்தார்.

ஸ்ட்ராங்கான பெண்

எல்லோரும் என்னை மிகவும் ஸ்ட்ராங்கான பெண்மணி என்று சொல்கிறார்கள். ஆனால் உண்மையில் சொல்ல வேண்டும் என்றால், எனக்கும் ஒரு சாதாரண பெண்மணி போல வீட்டில் பணம் வாங்கிக் கொண்டு, ரிலாக்ஸாக அமர வேண்டும் என்று தான் ஆசை.

அந்தமாதிரி பொண்ணுன்னு சொல்றாங்க; அம்மா இறந்த டைம்ல.. - பவித்ரா லட்சுமி வேதனை! | Actress Pavithra Lakshmi About Her Mother

ஆனால் அதற்கான சூழ்நிலை இல்லை. நமக்கு வேண்டியதை நாமே செய்து கொள்ள வேண்டும் அவ்வளவுதான். அம்மா இறந்தபோது நான் ஊரில் இல்லை. காசியில் இருந்தேன்.

நான் அங்கிருந்து வருவதற்குள், என்னுடைய நண்பர்கள் எனது அம்மாவிற்கு செய்ய வேண்டிய எல்லாவற்றையும் ஏற்பாடு செய்து விட்டார்கள். அவர்கள் அன்று அப்படி செய்யவில்லை என்றால் என்னால் என்ன செய்திருக்க முடியும் என்று எனக்கு தெரியவில்லை" என்று அழுதபடி பேசியுள்ளார்.