பூட்டிய வீட்டிலிருந்து வீசிய துர்நாற்றம் - பிணமாக கிடந்த பிரபல நடிகை - அதிர்ச்சி!

Bollywood Indian Actress Death Actress
By Jiyath Jun 10, 2024 01:25 PM GMT
Report

நடிகை நூர் மலபிகா தாஸ் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியள்ளது. 

நூர் மலபிகா தாஸ்

பாலிவுட் திரையுலகில் சிஸ்கியன் உள்பட பல்வேறு படங்களில் நடித்தவர் நூர் மலபிகா தாஸ் (37). மேலும், வால்க்மென், ஜகன்யா, உபயா உள்பட பல்வேறு வெப் தொடர்களிலும் நடித்துள்ளார். இவர் திரைத்துறைக்கு வருவதற்கு முன் விமான பணிப்பெண்ணாக பணியாற்றினார்.

பூட்டிய வீட்டிலிருந்து வீசிய துர்நாற்றம் - பிணமாக கிடந்த பிரபல நடிகை - அதிர்ச்சி! | Actress Noor Malabika Das Dies By Suicide

மலபிகா தாஸ் மும்பையில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார். இவர் தங்கியிருந்த வீடு கடந்த சில நாட்களாக பூட்டியபடி இருந்துள்ளது. இந்நிலையில் அந்த வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியதை அடுத்து, குடியிருப்பு வாசிகள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

'தமிழக வாழ்த்துக் கழகம்' - நடிகர் விஜய்யை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!

'தமிழக வாழ்த்துக் கழகம்' - நடிகர் விஜய்யை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!

தற்கொலையா?        

அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது நடிகை நூர் மலபிகா தாஸ் பிணமாக கிடந்துள்ளார். இதையடுத்து அவரது உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பூட்டிய வீட்டிலிருந்து வீசிய துர்நாற்றம் - பிணமாக கிடந்த பிரபல நடிகை - அதிர்ச்சி! | Actress Noor Malabika Das Dies By Suicide

இதுகுறித்த முதற்கட்ட விசாரணையில் மலபிகா தாஸ் தற்கொலை செய்துகொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பாலிவுட் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.