வாய்ப்புக்காக இயக்குனர் அப்படி கூப்பிட்டார் - அட்ஜஸ்ட்மென்ட் அனுபவத்தை கூறிய சீரியல் நடிகை!
பிரபல சீரியல் நடிகை தனது அனுபவம் பற்றி வெளிப்படையாக பேசியுள்ளார்.
சீரியல் நடிகை
சன் டிவியின் ஒளிபரப்பாகும் கண்ணான கண்ணே சீரியலில் கதாநாயகியாக நடித்து வருபவர் நிமிஷிகா ராதாகிருஷ்ணன். இவர் விஜய் டிவியில் கடைக்குட்டி சிங்கம் என்ற தமிழ் சீரியலின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.
இவர் சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருந்து வருகிறார், இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்த நிலையில், இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில், இவர் பட வாய்ப்புக்காக தவறாக அணுகியது குறித்து பேசியுள்ளார்.
நடிகை பேட்டி
தொடர்ந்து, அந்த பேட்டியில், "சீரியல்களில் அப்படி அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை இருப்பதாக எனக்கு தெரியவில்லை. ஆனால், வெப் சீரிஸ்கள் திரைப்படங்களில் நடிக்கும் போது அவர்கள் நம்மிடம் அதை எதிர்பார்க்கிறார்கள் என்பது உண்மைதான். என்கிட்டே காஸ்டிங் கவுச்ஸ் என்று சொன்னாங்க. எனக்கு புரியல உன்னுடைய தோழிகளிடம் அல்லது நண்பர்களிடம் கேட்டுப் பாருங்கள் என்று கூறினார்.
உடனே என்னுடைய தோழிகளுக்கு அழைத்து இது குறித்து கூறினேன். இதுபோல பட வாய்ப்பு கொடுக்கிறேன் என்று கூறுகிறார்கள் அதற்காக காஸ்டிங் கவுச்சிற்கு சம்மதிக்க வேண்டும் என்றார்னு சொன்னேன்.
அவர் பட வாய்ப்புக்காக அவர்கள் உன்னையே கேட்கிறார்கள் என்று கூறினார்கள். எனக்கு ஒரு நிமிடம் தூக்கி வாரி போட்டது. உடனே அப்படி கேட்ட அந்த இயக்கத்துக்கு போன் செய்து கண்டபடி திட்டினேன். எனக்கு தெரிந்த அனைத்து கெட்ட வார்த்தைகளையும் பயன்படுத்தி பயங்கரமாக திட்டினேன்" என்று கூறியுள்ளார்.