அஜித்துடன் அந்த மாதிரி கதாபாத்திரமா? வாய்ப்பே கிடையாது - நடிகை நிதி அகர்வால் ஓபன் டாக்!
நடிகை நிதி அகர்வால் நடிகர் அஜித்துடன் நடிக்கும் கதாபாத்திரம் குறித்து பேசியுள்ளார்.
நிதி அகர்வால்
'முன்னா மைக்கேல்' என்ற ஹிந்தி திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நிதி அகர்வால். பின்னர் 'சவ்யசாசி' என்ற படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமானார். பின்னர் மிஸ்டர் மஞ்சு, ஸ்மார்ட் ஷங்கர் ஆகிய திரைப்படத்தில் நடித்தார்.
இதனைத் தொடர்ந்து இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்த ஈஸ்வரன் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். மேலும், பூமி, கலகத் தலைவன் ஆகிய தமிழ் திரைப்படங்களில் நடித்தார்.
அண்மையில் ஒரு பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நிதி பங்கேற்றிருந்தார். அதில் தமிழ் திரைப்பட நடிகர்களின் புகைப்படங்களை பார்த்து அவர்களை பற்றி நிதி அகர்வால் பேசினார்.
பேச்சு
அப்போது நடிகர் அஜித்தின் புகைப்படத்தை பார்த்து நிதி அகர்வால் பேசியதாவது "எனக்கு அஜித்துடன் அண்ணன்,தங்கை கதாபாத்திரத்தில் நடிக்க விருப்பமில்லை. அவருக்கு ஹீரோயினாக நடிக்கத்தான் எனக்கு ஆசை என்று கூறினார்.
மேலும் அஜித் குறித்து நிதி அகர்வால் கூறியதாவது "அஜித் சார் ரொம்ப ஹாண்ட்ஸம். நல்ல தோற்றம் கொண்டவர். அவருடைய 'மங்காத்தா' படம் நான் பார்த்தேன். அது எனக்கு மிகவும் பிடித்தது. அவருடைய பெர்போமன்ஸ் அந்த படத்தில் நன்றாக இருக்கும்' என்று நிதி அகர்வால் பேசியுள்ளார்.

தமிழர் பகுதியில் உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பு : சுமந்திரன் -கஜேந்திரகுமார் நாளை சந்திப்பு IBC Tamil

பாம்பு குட்டிகளை பிடித்து விளையாடிய சிறுவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி- இறுதி நடப்பதை நீங்களே பாருங்க Manithan
