“சிம்பு ஒரு தங்கம்” - புகழ்ந்து தள்ளிய பிரபல நடிகை : மகிழ்ச்சியில் ரசிகர்கள்
நடிகை நிதி அகர்வால் ட்விட்டரில் ரசிகர்களின் கேள்விகளுக்கு வெளிப்படையாக பதிலளித்துள்ளதை பலரும் பாராட்டியுள்ளனர்.
சிம்புவின் 'ஈஸ்வரன்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமான நிதி அகர்வால் ஜெயம் ரவியுடன் பூமி படத்தில் நடித்தார். ற்போது இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் நிதி அகர்வால், அவ்வப்போது தனது கிளாமர் புகைப்படங்களையும் பகிர்வது வழக்கம்.
இந்நிலையில் ட்விட்டரில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த நிதி அகர்வாலிடம் சிம்பு பற்றி ஒரு வார்த்தையில் கூறுமாறு ரசிகர் ஒருவர் கேட்டார்.அதற்கு அவர் ‘தங்கமான மனிதர்’ என நிதி அகர்வால் பதிலளித்துள்ளார் .இந்த பதில் சிம்பு ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.