நடிகை நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணம் எப்போது? விக்னேஷ் சிவன் அறிவிப்பால் ரசிகர்கள் ஆர்வம்!
நயன்தாராவை ஏன் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறீர்கள் என்று ரசிகர் ஒருவர் சமூக வலைதளத்தில் கேட்ட கேள்விக்கு இயக்குனர் விக்னேஷ் சிவன், யாரும் எதிர்பார்க்காத பதிலை அளித்து ரசிகர்களை இன்ப அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளார்.

நயன்தாராவும், இயக்குநர் விக்னேஷ் சிவனும் 5 ஆண்டுகளாக காதலித்து வருகிறார்கள். நானும் ரௌடி தான் படத்தில் சேர்ந்து வேலை செய்தபோது அவர்களுக்கு இடையே காதல் மலர்ந்து தற்போது அவர்கள் இருவரும் லிவ் இன் முறைப்படி வாழ்ந்து வருகிறார்கள்.

இந்நிலையில் அவர்கள் விரைவில் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள். இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தார் விக்னேஷ் சிவன்.
அப்போது ரசிகர் ஒருவர், நீங்கள் ஏன் நயன்தாரா மேடத்தை இன்னும் திருமணம் செய்யாமல் இருக்கிறீர்கள்?. ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறோம் என கூறியுள்ளார். அதற்கு விக்னேஷ் சிவனோ, திருமணத்திற்கு ரொம்ப செலவு ஆகும் ப்ரோ. அதனால் பணம் சேர்த்து வைத்துக் கொண்டிருக்கிறேன். மேலும் கொரோனா வைரஸ் இவ்வுலகை விட்டு செல்ல காத்துக்கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் நீங்கள் நயனுக்காக கொடுத்த முதல் பரிசு என மற்றொரு ரசிகர் கேள்வி கேட்க, அதற்கு தங்கமே உன்னதான் என்ற பாடல் என்று பதிலளித்துள்ளார் விக்னேஷ் சிவன்.