நயன்தாராவுக்கு முத்தம் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்ட விக்னேஷ் சிவன் ! ரசிகர்கள் உற்சாகம்!
நயன்தாராவுக்கு முத்தம் கொடுத்த புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார் விக்னேஷ் சிவன். மேலும் நயன்தாராவிடம் பிடித்த குணம் எது என்பதையும் தெரிவித்துள்ளார்.

நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் பல நாட்களாக காதலித்து வருகின்றனர். தான் நயன்தாராவுடன் சேர்ந்து எடுக்கும் புகைப்படங்களை அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் போஸ்ட் செய்து வருகிறார் விக்னேஷ் சிவன்.
இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார் விக்னேஷ் சிவன். நயன்தாராவுடன் சேர்ந்து எடுத்துக்கொண்டதில் உங்களுக்கு பிடித்த புகைப்படம் எது என்று ரசிகர் ஒருவர் கேட்டார்.

அமெரிக்காவுக்கு சென்றபோது நயன்தாராவின் நெற்றியில் முத்தமிட்டபோது எடுக்கப்பட்ட புகைப்படத்தை வெளியிட்டார் விக்னேஷ் சிவன்.

நயன்தாராவிடம்
உங்களுக்கு பிடித்த குணம் எது என்று மற்றொருவர் கேட்டார். அதற்கு நயன்தாராவின் அழகிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டு, அவரின் தன்னம்பிக்கை
என்று பதில் அளித்துள்ளார் விக்னேஷ் சிவன்.