ஹனி மூன் போன இடத்தில் சிங்கிளாக போட்டோஷூட் நடத்திய நயன்தாரா : காரணம் என்ன?
நடிகை நயன்தாரா ஸ்பெயினில் தனியாக போட்டோஷூட் நடத்திய புகைப்படம் இணையத்தில் வைரலாகிவருகிறது.
நயன் விக்கி
கடந்த சில நாட்களுக்கு முன்பு திருமன பந்தத்தில் இணைந்த விக்னேஷ் சிவன் நயந்தார ஜோடி தற்போது மீண்டும் தங்கள் ஹனிமூனை கொண்டாட ஸ்பெயின் சென்றுள்ளனர்.
அங்கு பல்வேறு ஊர்களை சுற்றி பார்த்து மகிழும் இந்த ஜோடி பல்வேறு புகைப்படங்களை தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர்.
சிங்கிள் போட்டோஷுட்
இந்த நிலையில் ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா சென்றுள்ள இந்த தம்பதியினர் அங்கு தேசியக்கொடியினை பிடித்தபடி சென்ற புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின.
அதே போல்,ஸ்பெயின் நாட்டில் உள்ள புகழ்பெற்ற நகரமான வேன்ஸியாவிற்கு சென்றுள்ள இந்த ஜோடி அங்கு ஜாலியாக பொழுதை கழித்து வரும் நிலையில் , நயந்தாரா மட்டும் வேல்ன்ஸியாவில் சோலோவாக போட்டோஷூட் நடத்தியுள்ளார்.
அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் வெளியிட்ட விக்னேஷ்சிவன் ‘’நீ என் உலக அழகியே உன்னை போல் ஒருத்தி இல்லையே ’’ என பதிவிட்டுள்ளார்.
தற்போது அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.