‘நயன்தாராவா இது... என்ன ஆச்சு... இப்படி குச்சி போல் ஆகிவிட்டாரே...’ - போட்டோ பார்த்து ஷாக்கான ரசிகர்கள்
தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் என்று பல மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. நயன்தாரா சமீபத்தில் பாலிவுட்டிலும் அறிமுகமாகி இருக்கிறார்.
அங்கு அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். இவ்வாறு பிசியான நடிகையாக வலம் வரும் நயன்தாரா தற்போது தனது காதலனுடன் சேர்ந்து படத்தயாரிப்பிலும் ஈடுபட்டு வருகிறார்.
6 ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து வரும் நயன்தாராவும், விக்னேஷ் சிவனும், இந்த ஆண்டு இறுதிக்குள் திருமணம் செய்துகொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்நிலையில், நடிகை நயன்தாராவின் லேட்டஸ்ட் புகைப்படங்களை பார்த்து தற்போது ரசிகர்கள் ஷாக் ஆகி இருக்கிறார்கள். குல்பி போல் இருந்த நயன்தாராவா இது என கேட்கும் அளவுக்கு மிகவும் மெலிந்தான தோற்றத்தில் அவர் காணப்படுகிறார்.