என் கணவரை ஒதுக்கியவருடன் இனி நடிக்க மாட்டேன் - உச்சக்கட்ட கோபத்தில் நடிகை நயன்தாரா

Ajith Kumar Nayanthara Tamil Cinema Vignesh Shivan
By Thahir 1 மாதம் முன்
Report

கணவரை ஒதுக்கிய நடிகர் அஜித்துடன் இனி நடிக்கப் போவதில்லை என அவர் மீது உச்சகட்ட கோபத்தில் நடிகை நயன்தாரா இருப்பதாக கிசுகிசுக்கப்படுகிறது.

இயக்குநர் விக்னேஷ் சிவன் மாற்றம் 

நடிகர் அஜித்தின் துணிவு படம் பொங்கலுக்கு வெளியாகி மெகா ஹிட்டானது. அஜித் பட வரிசையில் இது நல்ல வசூலை பெற்றது. இந்தநிலையில் நடிகர் அஜித்தின் அடுத்த படத்தை யார் இயக்குகிறார் என்ற அறிவிப்பு முன்கூட்டியே வெளியானது.

Actress Nayanthara is extremely angry

விக்னேஷ் சிவன் தான் அஜித்தை வைத்து திரைப்படத்தை இயக்கப்போவதாக கூறப்பட்ட நிலையில் அது உறுதி செய்யப்படாமல் இருந்தது. இந்த நிலையில் கடந்த வாரம் அஜித் நடிக்க உள்ள திரைப்படத்தின் இயக்குநரை மாற்றிவிட்டதாக தகவல் வெளியானது.

இதனால் விக்னேஷ் சிவன் கடும் மன உளைச்சலில் இருப்பதாகவும் தகவல்கள் கசிந்தது. கடந்த வருடம் நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் 7 வருடங்களாக காதலித்து வந்த நிலையில் பிரமாண்டமாக திருமணம் செய்து செய்து கொண்டனர்.இதையடுத்து அவர்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்திருப்பதாக கூறி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினர்.

கடும் கோபத்தில் இருக்கும் நயன்தாரா 

இந்த நிலையில் நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்து வரும் நிலையில் தற்போது ஜெயம் ரவிக்கு ஜோடியாக இறைவன் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.

Actress Nayanthara is extremely angry

இதனிடையே நடிகர் அஜித் மீது நடிகை நயன்தாரா உச்சக்கட்ட கோபத்தில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எதற்கு என்றால் சொல்லவா வேண்டும் தன் கணவரை படத்திலிருந்து துாக்கி எறிந்ததால் தான் என்றும், இனி வாழ்க்கையில் அஜித் உடன் நடிக்க மாட்டேன் என சபதம் எடுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. 

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.