என் மீதான விமர்சனங்களை நான் கண்டுகொள்வதே கிடையாது - மனம் திறந்த நடிகை நயன்தாரா..!
என் மீதான விமர்சனங்களை நான் கண்டுகொள்வதே கிடையாது என்று நடிகை நயன்தாரா மனம் திறந்து பேசியுள்ளார்.
நயன்தாரா - விக்னேஷ் சிவன்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இவரும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் கடந்த ஜூன் 9-ம் தேதி காதல் திருமணம் செய்து கொண்டனர். திருமணம் நடந்து 4 மாதமே ஆன நிலையில், இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது டுவிட்டர் பக்கத்தில், நயன்தாராவும், நானும் அப்பா, அம்மா ஆகிவிட்டோம் என்று இரட்டை குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்டார்.
ஒல்லியான நயன்தாரா - வைரல் புகைப்படம்
சமீபத்தில் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் நடிகை நயன்தாரா புகைப்படத்துடன் கூடிய பதிவு ஒன்றை வெளியிட்டார். அந்த புகைப்படத்தில் நயன்தாரா மிகவும் உடல் மெலிந்து காணப்படுகிறார். இந்த புகைப்படத்தைப் பார்த்த ரசிகர்கள் என்ன இது... நம்ம நயன்தாராவா... வயதானவர்போல மாறிட்டாரே என்று ஆச்சரியத்தில் கமெண்ட் செய்து வந்தனர்.
மனம் திறந்த நயன்தாரா
தற்போது, திரையரங்குகளில் வெளியாக உள்ள ‘கனெக்ட்’ படத்தையொட்டி நடிகை நயன்தாரா ஒரு நேர்காணலில் மனம் திறந்து பேசினா.
அந்த நேர்காணலில் அவர் பேசியதாவது -
ஆரம்ப காலக் கட்டத்தில் மட்டுமல்ல, இன்றும் கூட என் மீது விமர்சனங்கள் இருந்து கொண்டுதான் வருகிறது. சமீபத்தில் ‘கனெக்ட்’ படத்தின் ஒரு காட்சியிலிருக்கும் என்னுடைய புகைப்படத்தை பகிர்ந்தேன். அது வைரலானது. ‘வெயிட் போட்டால் வெயிட் போட்டீங்க எனவும், ஒல்லியாக இருந்தால் ஒல்லியாகிவிட்டீர்கள்’ என விமர்சனங்கள் வந்துகொண்டுதான் இருக்கிறது.
‘கனெக்ட்’ படத்தின் அந்தப் புகைப்படத்தை பொறுத்தவரை அந்தக் கதாபாத்திரத்திற்கு தேவையான உடலமைப்பில்தான் நான் இருந்தேன். அது தான் வைரலானது. எது செய்தாலும் தவறு என ஆகிவிடுகிறது. பொதுவாக, என் மீதான விமர்சனங்களை நான் கண்டுகொள்வதில்லை. அதைப் பற்றி யோசிப்பதுகூட கிடையாது என்றார். தற்போது இது குறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
#Nayanthara reply to @Chrissuccess 's tweet pic.twitter.com/lzvuGtG383
— V?/#Connect from tomorrow/ (@Nayanfan1003) December 21, 2022
Good interview of Lady Superstar #Nayanthara by @DhivyaDharshini ?
— Ramesh Bala (@rameshlaus) December 21, 2022
A recap of her 20 years journey and lot of personal anecdotes..
? https://t.co/qXX9T8Xcm7