பெற்றோரை பார்க்க மாப்பிள்ளையுடன் சென்ற நடிகை நயன்தாரா! இணையத்தை கலக்கும் போட்டோ!

நயன்தாரா தன் காதலர் விக்னேஷ் சிவனுடன் தனி விமானத்தில் மீண்டும் கொச்சிக்கு சென்றபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

நடிகை நயன்தாராவும், இயக்குநர் விக்னேஷ் சிவனும் 5 ஆண்டுகளுக்கும் மேலாக காதலித்து வருகிறார்கள். இருவரும் லிவ் இன் முறைப்படி சேர்ந்து வாழ்கிறார்கள்.

கொரோனா வைரஸ் பிரச்சனை ஏற்படுவதற்கு முன்பு நேரம் கிடைக்கும் போதெல்லாம் விக்னேஷ் சிவனுடன் வெளிநாட்டிற்கு சென்றுவிடுவார் நயன்தாரா.

கொரோனா பிரச்சனைக்கு பிறகு வீட்டில் முடங்கவிட்டனர். அதிகபட்சமாக தன் பெற்றோரை பார்க்க கொச்சிக்கு செல்கிறார் நயன்தாரா.

இந்நிலையில் விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் தனி விமானம் மூலம் கொச்சிக்கு சென்றுள்ளனர். அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. 

ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்