திருப்பதியில் நயன்தாரா, ஷாருக்கான்.. குடும்பத்துடன் தரிசனம் - வைரலாகும் வீடியோ!

Nayanthara Shah Rukh Khan Bollywood Jawan Tamil Actress
By Vinothini Sep 05, 2023 08:06 AM GMT
Report

 நடிகர் ஷாருக்கான் மற்றும் நயன்தாரா குடும்பத்துடன் திருப்பதிக்கு சென்ற வீடியோ வைரலாகி வருகிறது.

ஜவான் படம்

தமிழ் சினிமாவின் இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவாகி உள்ள ஜவான் படத்தில், நயன்தாரா, தீபிகா படுகோனே, விஜய் சேதுபதி, யோகி பாபு, பிரியாமணி உள்ளிட்டோர் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளனர்.

actress-nayanthara-and-shah-rukh-khan-in-tirupati

இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி மொழிகளில் பான் இந்திய திரைப்படமாக செப்டம்பர் 7ஆம் தேதி வெளியாக உள்ளது.

திருப்பதியில் தரிசனம்

இந்நிலையில், ஜவான் படம் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக நடிகர் ஷாருக்கான், ஷாருக்கானின் மகள் சுப்ரதா, நயன்தாரா உள்ளிட்டோர் குடும்பத்துடன் நேற்று இரவு திருப்பதி மலைக்கு வந்திருந்தனர். இதையடுத்து இன்று காலை நடைபெற்ற சுப்ரபாத சேவையில் இருவரின் குடும்பத்தினரும் கலந்து கொண்டனர்.

இந்த சிறப்பு பூஜையில் கலந்து கொள்வதற்காக ஷாருக்கான் பட்டு வேஷ்டி, சட்டை அணிந்து வந்திருந்தார். நயன்தாரா வெள்ளை நிற சுடிதாரிலும், விக்னேஷ் சிவன் பட்டு வேட்டியிலும் கலந்து கொண்டு சாமியை வழிபட்டனர். இந்த வீடியோ தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.