நயன்தாராவின் அழகின் ரகசியத்தை வெளியிட்ட விக்னேஷ் சிவன்!
நயன்தாராவின் அழகின் ரகசியம் என்னவென்று சமூக வலைதளங்களில் ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு, விக்னேஷ் சிவன் அதிரடி பதிலை வெளியிட்டுள்ளார்.
விக்னேஷ் சிவன் இயக்கிய நானும் ரௌடி தான் படத்தில் நடித்தபோது நயன்தாராவுக்கு அவர் மீது காதல் ஏற்பட்டது. லிவ் இன் முறைப்படி வாழும் அவர்கள், விரைவில் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு விக்னேஷ் சிவன் பதில் அளித்து வருகிறார். திருமணம், குழந்தை, பிடித்த இடம், உணவு, நயன்தாராவின் ரகசியம், என நிறைய கேள்விகள் கேட்கப்பட்டு, அதற்கு விக்னேஷ் சிவன் இதுவரை வேற லெவல் பதிலளித்துள்ளார்.

அப்பொழுது ரசிகர் ஒருவரோ, நயன்தாரா அழகின் ரகசியத்தை சொல்லுங்கள் என்று கேட்டார். அதற்கு பிரார்த்தனை என்று பதில் அளித்திருக்கிறார் விக்னேஷ் சிவன்.
விக்கியின் பதிலை பார்த்தவர்களோ, இயக்குநரே குசும்பு தான் உங்களுக்கு. பிரார்த்தனை தான் அழகின் ரகசியம் என்று கூறினால் யாரும் மறுத்துப் பேச மாட்டார்கள் என்று தானே இப்படி ஒரு பதில் அளித்திருக்கிறீர்கள் என கமெண்டுகளை அள்ளி தட்டி வருகிறார்கள்.
