ஏன் சமந்தாகிட்ட கேட்கமாட்றீங்க...? என்கிட்ட மட்டும் கேட்குறீங்க...? - நமீதா காட்டம்
நடிகை நமீதா ‘எங்கள் அண்ணா’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். கவர்ச்சியில் இளைஞர்களை தன்வசம் இழுத்து கிறங்கடித்தார்.
விஜயகாந்த், சரத்குமார், அஜீத், விஜய் என்று பல முன்னணி நடிகர்களுடன் நடித்ததால் பிரபல நடிகையாக வலம் வந்தார். இவர் ‘மச்சான்.. மச்சான்’ என்று கூறிய வார்த்தைதான் ஃபேவரெட்டாக இருந்தது. விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘பிக்பாஸ் சீசன் 1’ல் போட்டியாளராக கலந்து கொண்டார் நமீதா.
இதனையடுத்து, கடந்த 2017ம் ஆண்டு தெலுங்கு நடிகர் வீரேந்திர சௌத்ரி என்பவரை திருமணம் செய்துக்கொண்டார் நடிகை நமீதா.
இந்நிலையில் நடிகை நமீதா பேட்டி ஒன்றை கொடுத்தார். அந்த போட்டியில் அவர் மனம் திறந்து பேசியுள்ளார்.
அப்போது, வாய்ப்புகள் குறைந்ததால்தான் நீங்கள் திருமணம் செய்து கொண்டீர்கள் என்று கூறப்பட்டதாக கேட்டக்கப்பட்டதற்கு அவர் விளக்கமளித்துள்ளார்.
அந்த விளக்கத்தில் நடிகை நமீதா, ‘எனக்கு திருமணமான அதே வருஷத்துலதான் சமந்தாவிற்கு திருமணமாச்சு. அப்போ அவங்க வாய்ப்பு குறைந்ததால திருமணம் செய்துக்கிட்டாங்களா? அதை ஏன் அவங்ககிட்ட கேட்க மாட்டுறாங்க. என்னிடம் மட்டுமே கேட்கிறாங்க’ என்று கூறியுள்ளார்.