கணவர் இத பண்ணாரு.. குழந்தை 4 மாசத்துல கலைஞ்சிடுச்சு - நடிகை நமிதா வேதனை!

Namitha Tamil Cinema Tamil Actors Tamil Actress Actress
By Jiyath Jun 11, 2024 02:09 PM GMT
Report

தான் கர்ப்பமானது குறித்து நடிகை நமிதா பேசியுள்ளார். 

நடிகை நமிதா

எங்கள் அண்ணா என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை நமிதா. தொடர்ந்து ஏய், பம்பர கண்ணாலே, ஆணை, கோவை பிரதர்ஸ், நான் அவன் இல்லை, தீ, பில்லா, அழகான பொண்ணுதான், இளமை ஊஞ்சல் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

கணவர் இத பண்ணாரு.. குழந்தை 4 மாசத்துல கலைஞ்சிடுச்சு - நடிகை நமிதா வேதனை! | Actress Namitha About Her Pregnancy

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியிலும் அவர் போட்டியாளராக பங்கேற்றுள்ளார். மேலும், சமீப காலமாக அரசியலில் அதிகம் ஆர்வம் செலுத்தி வருகிறார். இவர் கடந்த 2017-ம் ஆண்டு வீரேந்திர சவுத்ரி என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு இரட்டை குழந்தைகள் உள்ளனர்.

மனிதாபிமான கொலை.. ஸ்ரேயா கோஷல் கிட்ட அப்படி நடந்துக்கிட்டாரு இளையராஜா - விளாசிய பிரபலம்!

மனிதாபிமான கொலை.. ஸ்ரேயா கோஷல் கிட்ட அப்படி நடந்துக்கிட்டாரு இளையராஜா - விளாசிய பிரபலம்!

முதல் குழந்தை 

இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட நமிதா "நான் கர்ப்பமான விஷயத்தை முதலில் என் அப்பாகிட்ட தான் சொன்னேன். பீரியட்ஸ் மிஸ் ஆனதால பிரக்னன்சி டெஸ்ட் பண்ணேன். அப்போ பாஸிட்டிவ் ஆனதும் நான் ஷாக் ஆகிட்டேன்.

கணவர் இத பண்ணாரு.. குழந்தை 4 மாசத்துல கலைஞ்சிடுச்சு - நடிகை நமிதா வேதனை! | Actress Namitha About Her Pregnancy

இந்த விஷயத்தை என் அப்பாகிட்ட சொன்னதும் அவர் ரொம்ப சந்தோஷப்பட்டாரு. அந்த நேரத்தில் நான் சூரத்தில் இருந்தேன். இதை கேள்விப்பட்டதும் என் கணவர் அடுத்த நாளே ஃபிளைட் புடிச்சு வந்துட்டாரு. ஆனால், 2021-லயே நான் கர்ப்பமா இருந்தேன்.

என்னோட முதல் குழந்தை 4 மாசத்துல கலைஞ்சிடுச்சு. இதைப்பத்தி முதல் 2 மாசம் எனக்கு சுத்தமா தெரியல. அப்பறம் போக போகத்தான் தெரிஞ்சது என்னோட முதல் குழந்தை கலைஞ்சிடுச்சுனு" என வேதனை தெரிவித்துள்ளார்.