பிரபல நடிகை மாரடைப்பால் காலமானார் - ரசிகர்கள் அதிர்ச்சி
heart attack
passed away
actress nallennai chitra
By Anupriyamkumaresan
பிரபல தமிழ் மற்றும் மலையாளத் திரைப்பட நடிகையான சித்ரா மாரடைப்பால் இன்று காலமானார்.
மலையாளத்தில் மோகன்லால் மற்றும் ப்ரேம் நசீர் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்தவர் தான் நடிகை சித்ரா. தமிழில் கே.பாலச்சந்தரின் அபூர்வ ராகங்கள் திரைப்படம் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர்.
56 வயதாகும் நடிகை சித்ரா சென்னை சாலிகிராமத்தில் உள்ள இல்லத்தில் தனது மகள் மற்றும் கணவருடன் வசித்து வந்தார். இதற்கிடையே திடீர் மாரடைப்பு காரணமாக இன்று காலை அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
நல்லெண்ணெய் விளம்பரம் மூலம் ‘நல்லெண்ணெய் சித்ரா’எனப் பிரபலமடைந்தார். இவரது இழப்பு திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.