விவாகரத்தால் 2 குழந்தைகளுடன் தவிப்பு - உதவ முன்வந்த ஜெயலலிதாவிடம், நளினி சொன்னது?

Ramarajan Tamil Cinema Tamil Actress Actress
By Jiyath Oct 17, 2023 03:30 PM GMT
Report

நடிகர் ராமராஜானுடன் விவாகரத்து செய்த பின்னர் நடிகை நளினிக்கு உதவ முன்வந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா.

நடிகை நளினி

தமிழ் சினிமாவில் 80களில் பல முன்னணி நடிகர்களுடன் நாயகியாக வலம் வந்தவர் நடிகை நளினி. பல படங்களில் நடித்து புகழின் உச்சத்தில் இருந்தபோது நடிகர் ராமராஜனை காதலித்து, பெற்றோர் எதிர்த்தபோதும், அவர்களை எதிர்த்து திருமணம் செய்து கொண்டார்.

விவாகரத்தால் 2 குழந்தைகளுடன் தவிப்பு - உதவ முன்வந்த ஜெயலலிதாவிடம், நளினி சொன்னது? | Actress Nalini Refused Jayalalithas Help

இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். பல ஆண்டுகள் கழித்து இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து பிரிந்தனர். திரைத்துறையை விட்டு விலகி இருந்த நளினி தற்போது மீண்டும் சினிமா மற்றும் சீரியல்களில் நடிக்க தொடங்கியுள்ளார். இவருக்கு சின்ன திரையிலும் அதிகமான ரசிகர்கள் கிடைத்துக்கொண்டிருக்கிறது.

உதவ முன்வந்த ஜெயலலிதா

நளினி விவாகரத்திற்கு பின் தனது இரண்டு குழந்தைகளையும் வளர்க்க பெரும் பாடு பட்டுள்ளார். அப்போது ராமராஜன் அதிமுக சட்ட மன்ற உறுப்பினராக இருந்தபோது, நளினி 2 குழந்தைகளை வைத்து கஷ்டப்பட்டதை கேள்விப்பட்ட ஜெயலலிதா அவர்களின் பள்ளி செலவுகளை நான் பார்த்து கொள்கிறேன் என்று கூறினாராம்.

விவாகரத்தால் 2 குழந்தைகளுடன் தவிப்பு - உதவ முன்வந்த ஜெயலலிதாவிடம், நளினி சொன்னது? | Actress Nalini Refused Jayalalithas Help

ஆனால் நளினி "இல்லை அம்மா, அவர்கள் கஷ்டம் தெரிந்து வளர வேண்டும் என்று தெரிவித்தாராம். பிறகு தனது இரண்டு குழந்தைகளையும் கோபிலா மடத்தில் சேர்த்து படிக்க வைத்துள்ளார்.

மேலும், நளினி தனது சொந்த காலில் கஷ்டப்பட்டு வளர்த்த தனது மகன் மற்றும் மகள் இருவரும் இப்போது நல்ல நிலைமையில் உள்ளனர். இதற்கு காரணம் நளினியின் துணிச்சலும், தைரியமும்தான்.