பிரபல சின்னத்திரை நடிகை மவுனி ராய்க்கு விரைவில் திருமணம் - ரசிகர்கள் அதிர்ச்சி!
பிரபல பாலிவுட் நடிகை மவுனி ராய் அவரது காதலரான சூரஜ் நம்பியாரை வரும் ஜனவரி மாதம் திருமணம் செய்து கொள்ளப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
2006ம் ஆண்டில் இருந்து இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருபவர் மவுனி ராய். நாகினி சீரியல் மூலம் ஏகத்திற்கும் பிரபலமானார். அவர் துபாய்க்கு சென்ற நேரத்தில் கொரோனா வைரஸ் பிரச்சனை விஸ்வரூபம் எடுக்கவே லாக்டவுன் அமல்படுத்தப்பட்டது.
லாக்டவுனின்போது மவுனி ராய் துபாயில் சிக்கிக் கொண்டார். அவர் தன் சகோதரியின் குடும்பத்தாருடன் தங்கியிருந்தார். அந்த நேரத்தில் துபாயை சேர்ந்த பேங்கரான சூரஜ் நம்பியார் மீது மவுனி ராய்க்கு காதல் ஏற்பட்டது.
இந்த நிலையில், வரும் ஜனவரி மாதம் இருவருக்கும் துபாய் அல்லது இட்டாலியில் திருமணம் நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனை கேட்ட மவுனியின் காதல் ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.