30 வயது வித்தியாசத்தில் பிரபல இயக்குனரை திருமணம் செய்த நடிகை - 2வது திருமணம்?
பாலு மகேந்திராவை திருமணம் செய்துகொண்டது குறித்து நடிகை மெளனிகா மனம் திறந்துள்ளார்.
நடிகை மெளனிகா
முன்னணி இயக்குநராகவும் ஒளிப்பதிவாளாராகவும் வலம் வந்தவர் பாலு மகேந்திரா. அழியாத கோலங்கள், மூடு பனி, மூன்றாம் பிறை உள்ளிட்ட ஏராளமான படங்களை இயக்கியுள்ளார். நடிகை மெளனிகாவை 30 வயது வித்தியாசத்தில் மூன்றாவதாக திருமணம் செய்துகொண்டார்.
இவர் உன் கண்ணில் நீர் வழிந்தால் படத்தின் மூலம் அறிமுகமானார். அதன்பின், கடைக்குட்டி சிங்கம், மீண்டும் ஒரு மரியாதை, ஆனந்தம் விளையாடும் வீடு படங்களில் நடித்தார். தற்போது, ஸ்டார் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ஆஹா கல்யாணம் சீரியலில் நடித்து வருகிறார்.
சத்தியம்?
இந்நிலையில், பாலுமகேந்திராவுடனான உறவு குறித்து மெளனிகா சில தகவல்கள் பகிர்ந்துள்ளார். அதில், பாலுமகேந்திரா இறக்கும் முன் தன்னிடம் 2 சத்தியம் செய்ய சொன்னார். அதில் ஒன்று தான் இறந்த பிறகு உனக்கு பிடித்த இயக்குனர்களில் படங்களில் நடிக்க வேண்டும் என்று கூறினார்.
அதற்கு தானும் சம்மதித்து சத்தியம் செய்தேன். 2-வதாக தன்னை வேறு திருமணம் செய்துகொள்ளும்படி சத்தியம் கேட்டார். அதற்கு முடியாது என்று சத்தியம் செய்ய மறுத்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.