முதல் படத்துல எனக்கு 15 வயசுதான்; சாக்லேட் குடுத்து அத பண்ணாங்க - நடிகை மோகினி வெளிப்படை!

Mohini Tamil Cinema Tamil Actress Actress
By Jiyath Nov 30, 2023 04:15 PM GMT
Report

சினிமாவில் நடிக்கும்போது நடந்த சில நிகழ்வுகளை குறித்து நடிகை மோகினி பேசியுள்ளார். 

நடிகை மோகினி 

90ஸ்களில் பலரின் பேவரைட் நடிகையாக வளம் வந்தவர் மோகினி. அவரின் கண்கள் வித்தியாசமான நிறத்தில் இருப்பதால், அதற்கே தனி ரசிகர் கூட்டம் உள்ளது. மோகினி ஈரமான ரோஜாவே என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.

முதல் படத்துல எனக்கு 15 வயசுதான்; சாக்லேட் குடுத்து அத பண்ணாங்க - நடிகை மோகினி வெளிப்படை! | Actress Mohini About Kattum Selai Madippil Song

தொடர்ந்து நாடோடிப் பாட்டுக்காரன், சின்ன மருமகள், உடன் பிறப்பு, கண்மணி, ஜாமீன் கோட்டை, அந்த நாள், சேரன் சோழன் பாண்டியன் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். தமிழ், மலையாளம், தெலுங்கு. கன்னடா, ஹிந்தி ஆகிய மொழிகளில் நடித்துள்ளார். பின்னர் பரத் என்பவரை திருமணம் செய்து கொண்ட மோகினி சினிமாவில் நடிப்பதை விட்டு விலகினார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.

அண்மையில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த மோகினி, ஈரமான ரோஜாவே படத்தில் நடிக்கும்போது தனக்கு 15 வயதுதான். 9ம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும்போது விடுமுறை காலகட்டத்தில் தான் ஈரமான ரோஜாவே திரைப்படத்தில் நடிக்கத் தொடங்கினேன். அந்த திரைப்படத்தில் நடிக்கும் போது எனக்கு 5 ஸ்டார் சாக்லேட் கொடுத்து எளிமையாக நடிக்க வைத்தார்கள் என்று கலகலப்பாக பேசினார்.

பேட்டி 

மேலும் பேசிய அவர் "எனது வாழ்க்கையில் ரொம்பவே யோசித்து யோசித்து நடித்தது என்றால் அது 'புதிய மன்னர்கள்' என்ற படத்தில் இடம் பெற்ற "கட்டும் சேலை மடிப்பில" என்ற பாட்டில்தான். அந்தப் பாட்டு எனக்கு வேண்டாம் என்று நான் ஆரம்பத்திலிருந்தே சொல்லிக் கொண்டே இருந்தேன்.

முதல் படத்துல எனக்கு 15 வயசுதான்; சாக்லேட் குடுத்து அத பண்ணாங்க - நடிகை மோகினி வெளிப்படை! | Actress Mohini About Kattum Selai Madippil Song

விக்ரமனிடம் இது பற்றி நான் பேசினேன். ஆனால் அவர் நீங்க பண்ணுங்க நல்லா இருக்கும் என்று ஒரே வார்த்தையில் சொல்லி விட்டார். எனக்கு அந்த நேரத்தில் இந்த மாதிரி கிராமத்து உடை உடுத்தி டான்ஸ் ஆடவும் தெரியாது. அந்தப் பாட்டுக்கு ஷூட்டிங்கில் டான்ஸ் ஆடிக் கொண்டிருக்கும்போது கூட எனக்கு அந்த டான்ஸ் வராமல் நான் ஏதோ பரதநாட்டியம் ஆடுவது போன்று ஏனோ தானோ என்று தான் ஆடி முடித்தேன்.

ஆனால் பாட்டு வெளியான பிறகு தான் எனக்கு விக்ரமன் சொன்னது தான் சரி என்று தெரிந்தது. என்னுடைய கண்ணைப் பார்த்து பலரும் அழகாக இருக்கிறது என்று சொன்னாலும் நான் இந்த கிராமத்து பாடலில் என்னுடைய கண் இதற்கு செட்டாகுமா என்று தான் பயந்தேன். ஆனால் கடைசியில் அவ்வளவு அழகாக அந்த பாட்டு இருந்தது என்று அந்த பேட்டியில் மோகினி அந்த பேட்டியில் பேசியுள்ளார்.