பிரபல நடிகை மியா ஜார்ஜின் தந்தை காலமானார் - சோகத்தில் மூழ்கிய திரையுலகம்

actress dad passed away Miya
By Anupriyamkumaresan Sep 23, 2021 02:26 PM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in சினிமா
Report

நடிகை மியா ஜார்ஜின் தந்தை ஜார்ஜ் ஜோசப் காலமானதை தொடர்ந்து திரை பிரபலங்கள் பலரும் அவர்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். தமிழில் ஆர்யாவின் தம்பி சத்யா நடித்த அமரகாவியம் படத்தில் அறிமுகமானவர் நடிகை மியா ஜார்ஜ்.

அடுத்ததாக நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் நேற்று இன்று நாளை, சசிகுமார் நடிப்பில் வெற்றிவேல், விஜய் ஆண்டனியின் எமன், ஒரு நாள் ஒரு கூத்து போன்ற வெற்றி படங்களில் ஹீரோயினாக நடித்தார். மேலும் கேரள நடிகையான இவர் மலையாள படங்களிலும் நடித்துள்ளார்.

பிரபல நடிகை மியா ஜார்ஜின் தந்தை காலமானார் - சோகத்தில் மூழ்கிய திரையுலகம் | Actress Miya George Father Passed Away

இவர் கேரளாவை சேர்ந்த தொழிலதிபர் அஸ்வின் பிலிப்பையா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் மியா ஜார்ஜ் – அஸ்வின் தம்பதிகளுக்கு ஆண் குழந்தை பிறந்தது.

இந்த குழந்தைக்கு லூகா ஜோசப் பிலிப் என்று பெயர் வைத்தனர். தற்போது நடிகை மியா ஜார்ஜ் தமிழில் விக்ரம் நடிப்பில் உருவாகும் கோப்ரா படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் இவரது தந்தை ஜார்ஜ் ஜோசப் மரணமடைந்துள்ளார். 75 வயதான இவர் ஏற்கனவே உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் திடீரென கேரள மாநிலம் கோட்டயத்தில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார்.

பிரபல நடிகை மியா ஜார்ஜின் தந்தை காலமானார் - சோகத்தில் மூழ்கிய திரையுலகம் | Actress Miya George Father Passed Away

இவருக்கு மினி என்ற மனைவியும் நடிகை மியா ஜார்ஜ் மற்றும் கினி என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். இவரின் இறுதிச்சடங்கு இன்று கோட்டயம் மாவட்டத்தில் உள்ள சர்ச்சில் நடைபெறவுள்ளது.

மியா ஜார்ஜ் அவர்களின் தந்தை காலமானதை அடுத்து திரையுலகினர் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். சமூக வலைத்தளம் வாயிலாக ரசிகர்கள் மியாவிற்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.

மியாவிற்கு குழந்தை பிறந்து ஒரு சில மாதங்களே ஆன நிலையில், அவர் தந்தையின் இழப்பு மியாவின் குடும்பத்தை கண்ணீரில் ஆழ்த்தியுள்ளது.