நான் கர்ப்பமாக இருக்கேன்? தவறா பேசுனவங்க மன்னிப்பு கேட்கனும் இல்லைனா...நடிகை மெஹரின்!

Tamil Cinema Actress Social Media
By Swetha May 17, 2024 07:58 AM GMT
Report

தன்னை பற்றி தவறான தகவலை பரப்பியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என நடிகை மெஹரின் கூறியுள்ளார்.

நடிகை மெஹரின் 

திரைத்துறையில் நடிகர், நடிகைகள் பட வாய்ப்பு, புகழ், சூழ்நிலை போன்ற காரணங்களால் தாமதமாக திருமண செய்து கொள்கிறார்கள். இந்த நிலையில், நடிகர் தனுஷூடன் ‘பட்டாஸ்’ படத்தில் ஜோடியாக நடித்த நடிகை மெஹ்ரீன் தனக்கு எப்போது திருமணம் என்று இதுவரை முடிவு செய்யாததால்

நான் கர்ப்பமாக இருக்கேன்? தவறா பேசுனவங்க மன்னிப்பு கேட்கனும் இல்லைனா...நடிகை மெஹரின்! | Actress Mehreen Slams Fake News Over Egg Freezing

எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தனது கரு முட்டைகளை உறைய வைத்து, பாதுகாத்து வருவதாக கூறினார். இதை திரித்து சிலர் தவறாக தகவல் பரப்பி அவதூறு செய்து இருப்பதாக மெஹரின் கண்டித்து உள்ளார். இதுகுறித்து பேசிய அவர், "கருமுட்டை குறித்து நான் வீடியோவில் வெளியிட்ட தகவலை முழுமையாக புரிந்து கொள்ளாமல் சிலர் இணைய தளத்தில்

திருமணத்திற்கு முன்னாடியே நான் அதை செஞ்சிட்டேன் - போட்டுடைத்த தனுஷ் பட நடிகை!

திருமணத்திற்கு முன்னாடியே நான் அதை செஞ்சிட்டேன் - போட்டுடைத்த தனுஷ் பட நடிகை!

மன்னிப்பு கேட்கனும்

தவறாக அவதூறு செய்துள்ளனர்.இது மன்னிக்க முடியாத குற்றம். கருமுட்டையை உறைய வைக்கும் முறை பற்றி நான் தைரியமாக பேசினேன். குழந்தைக்காக பெண்கள் அவசரமாக கருத்தரிக்க வேண்டிய அவசியம் இல்லை. குழந்தை இப்போது வேண்டாம் என்று நினைப்பவர்களுக்கு கருமுட்டைகளை பத்திரப்படுத்தி வைக்கும் முறை ஒரு வரப்பிரசாதம் என்றேன்.

நான் கர்ப்பமாக இருக்கேன்? தவறா பேசுனவங்க மன்னிப்பு கேட்கனும் இல்லைனா...நடிகை மெஹரின்! | Actress Mehreen Slams Fake News Over Egg Freezing

இதை சரியாக புரிந்து கொள்ளாமல் என்மீது அவதூறு செய்துள்ளனர். நான் கர்ப்பமாக இருப்பதாகவும் கூறியுள்ளனர். தவறான தகவலை பரப்பியவர்கள் அதை நீக்கிவிட்டு உடனே மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையேல் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்" இவ்வாறு ஆவேசமாக தெரிவித்துள்ளார்.