மேகா ஆகாஷிற்கு திருமணம்? முறைப்படி அறிவிப்போம் - அவரது அம்மா தகவல்!

Megha Akash Gossip Today Marriage
By Sumathi Jun 08, 2023 02:30 PM GMT
Report

மேகா ஆகாஷிற்கு விரைவில் திருமணம் நடைப்பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேகா ஆகாஷ்

என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை மேகா ஆகாஷ்(27). இதை தொடர்ந்து ரஜினியின் பேட்ட சிம்புவுடன் வந்தா ராஜாவாதான் வருவேன் படத்திலும் நடித்தார். மேலும், தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்துள்ளார்.

மேகா ஆகாஷிற்கு திருமணம்? முறைப்படி அறிவிப்போம் - அவரது அம்மா தகவல்! | Actress Megha Akash Marriage About Her Mother

இந்நிலையில் இவருக்கு திருமணம் என தகவல் வெளியாகி தீயாக பரவி வருகிறது. அவரது பெற்றோர் திருமணம் நடத்த திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகிவருகிறது. பிரபல அரசியல்வாதியின் மகனுடன் திருமணம் நடக்கவிருப்பதாக கூறப்படுகிறது.

திருமணம்?

இதுகுறித்து அவரது அம்மா, ``ட்விட்டர்ல யாரோ மேகாவுக்குக் கல்யாணம்னு யாரோ எழுதி இருக்காங்க. அந்தப் பதிவுக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்ல. மேகாவுக்குக் கல்யாணம்னா அதை நாங்களே முறைப்படி அறிவிப்போம்.

மேகா ஆகாஷிற்கு திருமணம்? முறைப்படி அறிவிப்போம் - அவரது அம்மா தகவல்! | Actress Megha Akash Marriage About Her Mother

மேகா நடிச்ச படங்களோட ரிலீஸ் அப்போ கூட இத்தனை பேர் கால் பண்ணிப் பேசினதில்ல. மேகாவுக்கு கல்யாணமான்னு நிறைய போன் கால்ஸ் வருது. ஆனா, இது தவறான செய்தி." எனத் தெரிவித்துள்ளார்.