'குட் நைட்' பட நடிகைக்கு நிச்சயதார்த்தம்.. விரைவில் திருமணம் - ரசிகர்கள் வாழ்த்து!
நடிகை மீதாவிற்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு, நேற்று அவரின் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது.
நடிகை மீதா
'முதல் நீ முடிவும் நீ' என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை மீதா ரகுநாத். அறிமுகமான முதல் படத்திலேயே ரசிகர்களை கவர்ந்த இவர், நடிகர் மணிகண்டனுக்கு ஜோடியாக 'குட் நைட்' படத்தில் நடித்தார். இந்த படம் பெரும் வெற்றி பெற்றது.

மேலும், இப்படத்தில் அனு என்ற கதாபாத்திரத்தில் நடித்த மீதாவின் இயல்பான நடிப்பு பலரையும் வெகுவாக ரசிக்க வைத்தது. இவரது நடிப்பை பார்த்துவிட்டு, இவரைப் போல தனக்கு மனைவி வேண்டும் என்று சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பேசும் அளவிற்கு, மீதாவின் கதாபாத்திரம் அமைந்திருந்தது.
திருமணம்
இந்நிலையில் நடிகை மீதாவிற்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு, நேற்று அவரின் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. தனது வருங்கால கணவருடன் மீதா எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்த்துள்ளது.

மேலும், விரைவில் திருமண தேதி அறிவிக்கப்படவுள்ள நிலையில் மீதாவிற்கு ரசிகர்கள் சமூக வலைதளங்கள் மூலமாக வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ஆனால் 'குட் நைட்' படத்தில் மீதாவை பார்த்து ரசித்து, அவரைப்போல மனைவி வேண்டும் என நினைத்த ரசிகர்கள் சற்று வருத்தமாகவே வாழ்த்து தெரிவிக்கின்றனர்.
கிரீஸ் நாட்டில் காட்டுத்தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்ட இரண்டு உலங்குவானூர்திகள் விபத்து IBC Tamil
மஹர சிறையில் காயமடைந்த கைதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு : கைதிகளை பார்வையிடவும் அனுமதி இல்லை IBC Tamil