மீண்டும் நடிகை மீரா மிதுன் கைது - சைபர் கிரைம் போலீசார் அதிரடி

arrest actress action Meera Mitun மீராமிதுன் கைது cyber-crime-police சைபர்-கிரைம்-போலீசார் அதிரடி
By Nandhini Mar 25, 2022 09:15 AM GMT
Report

நடிகை மீரா மிதுன், மாடலிங் மற்றும் அழகுப் போட்டிகளில் பங்கேற்றது மட்டுமின்றி தமிழ் சினிமாவில் சிறிய வேடங்களில் நடித்துள்ளார்.

ரியாலிட்டி ஷோ-வான 'ஜோடி நம்பர் ஒன்', சீசன் 8-ல் கலந்துக்கொண்டார். பிறகு, 'பிக் பாஸ் சீசன் 3' ல் கலந்துக் கொண்டார்.

'பிக் பாஸ் 3' நிகழ்ச்சிக்குப் பிறகு மீரா பல சர்ச்சைகளில் சிக்கினார். அதில் சூர்யா, ஜோதிகா, விஜய் மற்றும் கமல்ஹாசன் போன்ற முன்னணி நட்சத்திரங்கள் மீது சமூக வலைதளங்களில் வார்த்தை தாக்குதல் நடத்தினார். இது பெரும் சர்ச்சையாக வெடித்தது.

இதைத்தொடர்ந்து பட்டியல் பிரிவு மக்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியதால் மீரா மிதுன் கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் ஜாமீனில் வெளியே வந்து மீராமிதுன் 'பேய காணோம்' என்ற புதிய திரைப்படத்தில் நடித்தார்.

இந்நிலையில், ஜாமீனில் வெளியே வந்த மீராமிதுன் விசாரணைக்கு முறையாக ஆஜராகவில்லை.

இதனால், இவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு, முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.அல்லி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மீரா மிதுன் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.

இதனால், அவருக்கு எதிராக ஜாமீனில் வர முடியாத அளவிற்கு பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இதனையடுத்து, தற்போது மீராமிதுனை சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.

மீண்டும் நடிகை மீரா மிதுன் கைது - சைபர் கிரைம் போலீசார் அதிரடி | Actress Meera Mitun Cyber Crime Police