நடிகை மீரா மிதுன் தலைமறைவு - வலைவீசி தேடும் போலீசார்
நடிகை மீரா மிதுன் தலைமறைவாக உள்ளதாக சென்னை அமர்வு நீதிமன்றத்தில் காவல்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீரா மிதுன் தலைமறைவு
அண்மையில் பட்டியலின மக்கள் குறித்து அவதுாறாக பேசி சர்ச்சையில் சிக்கினார் நடிகை மீரா மிதுன். இதையடுத்து அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி காவல்நிலையித்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் மீரா மிதுன் மற்றுமு் அவரது ஆண் நண்பரை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர். இதையடுத்து அவருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
இந்த நிலையில் இந்த வழக்கில் சாட்சி விசாரணை தொடங்கிய நிலையில் மீரா மிதுன் ஆஜராகாததால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டு இருந்தது.
நடிகை மீரா மிதுனுக்கு இரண்டாவது முறையாக பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நிலையில் தலைமறைவாகியுள்ளதாக நீதிமன்றத்தில் காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
தலைமறைவாக உள்ள மீரா மிதுன் விரைவில் கண்டுபிடிக்கப்பட்டு ஆஜர்படுத்தப்படுவார் என அரசு சிறப்பு வழக்கறிஞர் சுதாகர் உத்தரவாதம் அளித்துள்ளார்.