‘வாயை கொடுத்து மீண்டும் சிக்கிய மீராமிதுன்’ - மேலும் ஒரு வழக்கில் அதிரடி கைது
வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் நடிகை மீரா மிதுன் மற்றொரு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த வாரம் நடிகை மீராமிதுன் வெளியிட்ட வீடியோ ஒன்றில் குறிப்பிட்ட சமுதாய மக்களை அவதூறாக பேசும் வகையில் கருத்துகளை தெரிவித்திருந்தார்.
இதையடுத்து மீரா மிதுன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னியரசு சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தார்.
அந்த புகாரின் அடிப்படையில் மீரா மிதுன் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கேரளாவில் ஆகஸ்ட் 14 ஆம் தேதி கைது செய்யப்பட்டு தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
ஜாமீன் கோரி அவர் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது. இந்நிலையில் தன்னைப் பற்றி சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துகள் கூறி வருவதாக ஜோ மைக்கல் பிரவீன் என்பவர் 2020 செப்டம்பர் மாதம் எம்.கே.பி நகர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில் பேரில் நடிகை மீராமிதுன் மீது கைது வாரண்ட் பெறப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் நாளை புழல் சிறையில் இருக்கும் மீராமிதுனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த எம்.கே.பி.நகர் போலீசார் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.