கணவன் இறப்பதற்கு முன்பே அதை செஞ்சாச்சு - மிரளவைக்கும் மீனாவின் சொத்து மதிப்பு!
மீனாவின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
நடிகை மீனா
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான கமல், ரஜினி, அஜித் உள்ளிட்ட பலருடன் நடிகை மீனா நடித்துள்ளார். 90களில் அதிக படங்களில் நடித்து ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தார்.
தெலுங்கு, மலையாளம், கன்னடம் என மற்ற மொழிகளில் வெளியான திரைப்படங்களிலும் நடித்திருந்தார். 2009 ஆம் ஆண்டு வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நைனிகா என்ற மகள் உள்ளார்.
சொத்து மதிப்பு
கடந்த ஆண்டு மீனாவின் கணவர் உடல்நிலை குறைவால் காலமானார். அந்த துயரத்தில் இருந்து மீண்டுள்ள மீனா தற்போது ஜெய ஜோஸ் ராஜ் என்ற மலையாள இயக்குனரின் படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் இன்று 46வது பிறந்த நாளை கொண்டாடி வரும் இவரது சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இறப்பதற்கு முன்னரே வித்யாசாகர் தனது சொத்துக்களை மீனா மற்றும் மகள் மீது எழுதி வைத்துள்ளார்.
அவர் பெரிய நிறுவனத்தில் இன்ஜினியராக இருந்தார். அவருக்கு மாத சம்பளமே 3 அல்லது 4 லட்சம் இருக்கும்.
மீனாவும் தொடர்ந்து நடித்துக்கொண்டே இருந்ததால், அந்த பணத்தை அப்படியே பேங்க்கில் டெபாசிட் செய்துள்ளார். அவரின் முழு சொத்து மதிப்பு மட்டுமே சுமார் ரூ. 35 கோடியில் இருந்து 40 கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது.