2-வது திருமணம்...? - நான் ரெடி.... வெட்கத்தில் மீனா வெளிட்ட வீடியோ - வாயடைத்த ரசிகர்கள்...!

Meena
By Nandhini 2 மாதங்கள் முன்

நடிகை மீனா

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை மீனா. இவர் குழந்தையிலிருந்து தமிழ் சினிமாவில் நடித்து வருகிறார். நடிகை மீனாவிற்கும், பெங்களூரூவை சேர்ந்த கணிணி பொறியாளர் வித்யாசாகருக்கும் கடந்த 2009 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இத்தம்பதிகளுக்கு நைனிகா என்ற மகள் உள்ளார்.

வித்யாசாகர் மரணம்

நடிகை மீனா தற்போது கோட்டூர்புரம் பகுதியில் உள்ள ஸ்ரீநகர் காலனி அவென்யூவில் வசித்து வருகிறார். சமீபத்தில் மீனாவின் கணவர் வித்யாசகருக்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். இதனையடுத்து, மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட வித்யாசாகருக்கு நுரையீரல் பிரச்சினை ஏற்பட்டது. இதற்கு சிகிச்சை எடுத்துக் கொண்டு வந்த வித்யாசகர் சிகிச்சை பலனின்றி சமீபத்தில் உயிரிழந்தார்.

மீனாவுக்கு மறுமணமா?

கணவர் உயிரிழப்பால் மீனா சோகத்தில் இருந்து வந்தார். தற்போது கொஞ்சம் கொஞ்சமாக அதிலிருந்து மீண்டு வருகிறார். இந்நிலையில், நடிகை மீனாவின் 2வது திருமணம் குறித்த தகவல்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. மீனா குடும்ப நண்பரை திருமணம் செய்ய உள்ளதாக தற்போது தகவல்கள் பரவி வருகிறது.

actress-meena-viral-video

நான் ரெடி...

இந்த தகவல்கள் உறுதியாகாத நிலையில், தற்போது நடிகை மீனா தன் சமூக வலைதளத்தில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில், கேமராக்களுடன் அவரது நண்பர்கள் விரட்ட அறைக்குள் சென்று கதவை சாத்திக்கொள்ளும் மீனா, அடுத்த சில நிமிடங்களிலேயே ஃபுல் மேக்கப்பில் வெளியே வருகிறார். வெளியே வந்து இடுப்பில் கை வைத்தப்படி போஸ் கொடுத்த மீனா, ஐ அம் ரெடி... என்று சொல்கிறார்.

இந்த வீடியோவிற்கு பெண்கள் தயாராக நீண்ட நேரம் ஆகும் என்றும், யார் சொன்னது என்று கேட்டு கேப்ஷன் கொடுத்துள்ளார்.

இதைப் பார்த்த நெட்டிசன்கள் ஒருவேளை திருமணத்திற்கு நான் ரெடியாகிவிட்டேன் என்று சூசகமாக சொல்கிறாரா... இல்லை அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை. யார் சொன்னது என்று கேள்வி கேட்கிறாரா என்று ரசிகர்கள் குழம்பி வருகின்றனர்.

என்னவோ போங்க.. ஆனா இந்த டிரஸில் நீங்க ரொம்ப அழகாக இருக்கிறீங்க என்று வாயடைத்து லைக்குகளை போட்டு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.