அப்படி கேட்டாங்க.. ரூமிலிருந்து என்னால வெளியவே வர முடியல - நடிகை மீனா ஓபன் டாக்!

Meena Tamil Cinema Tamil Actors Tamil Actress Actress
By Jiyath Jan 19, 2024 04:51 PM GMT
Report

நீச்சல் உடை அணிந்து நடித்தது குறித்து நடிகை மீனா பேசியுள்ளார்

நடிகை மீனா

90ஸ்'களில் பலரின் கனவுக் கன்னியாக வளம் வந்தவர் நடிகை மீனா. 1990ல் 'ஒரு புதிய கீதை' என்ற படம் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானார்.

அப்படி கேட்டாங்க.. ரூமிலிருந்து என்னால வெளியவே வர முடியல - நடிகை மீனா ஓபன் டாக்! | Actress Meena Spoken About Acting In A Swimsuit

ரஜினி,கமல்,அஜித்,என அனைத்து முன்னணி ஹீரோக்களுக்கும் ஜோடியாக நடித்திருக்கிறார். தமிழ், தெலுங்கு,கன்னடம், மலையாளம் என அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் மீனா நடித்திருக்கிறார்.

தற்போது தமிழ் சினிமாவில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். மீனா கலந்து கொண்ட நேர்காணல் ஒன்றில், நீச்சல் உடை அணிந்து நடித்தது குறித்து பேசியுள்ளார்.

நெருடலாக இருந்தது

அவர் பேசியதாவது "என்னை சுற்றி இருந்தவர்கள் என்னிடம் ஏன் நீங்கள் கிளாமர் ரோலை முயற்சிக்கக்கூடாது என கேட்டார்கள். அதுமட்டுமில்லாமல் அப்படி ஒரு முயற்சி செய்தால் என்னவென்று எனக்கே தோன்றியது.

அப்படி கேட்டாங்க.. ரூமிலிருந்து என்னால வெளியவே வர முடியல - நடிகை மீனா ஓபன் டாக்! | Actress Meena Spoken About Acting In A Swimsuit

அந்தவகையில் பிரபுதேவா படத்தில் நீச்சல் உடையில் நடித்திருப்பேன். அந்த நீச்சல் உடையை அணிந்ததும் மேக்கப் ரூமிலிருந்து என்னால் வெளியே வரவே முடியவில்லை. அவ்வளவு நெருடலாக இருந்தது. எப்படி செல்வது என்ற கூச்சம் இருந்தது.

அப்போதுதான் இந்த மாதிரியான கிளாமர் மற்றும் கவர்ச்சியான காட்சிகளில் நடிக்கும் நடிகைகளின் காலில் விழுந்து கும்பிட வேண்டும் என்ற எண்ணம் எனக்கு தோன்றியது" என்றார்.