நடிகை மீனாவுக்கு திருமணம் செய்ய முடிவெடுத்த அம்மா - எப்போது தெரியுமா?
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை மீனா. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான கமல், ரஜினி, அஜித் உள்ளிட்ட பலருடன் நடித்துள்ளார்.
முன்னணி நடிகை
90களில் அதிக படங்களில் நடித்து ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தார். ரஜினி உடன் குழந்தை நட்சத்திரமாக அன்புள்ள ரஜினிகாந்த் திரைப்படத்தில் நடித்த இவர், பின்னர் வீரா மற்றும் முத்து திரைப்படங்களில் ஜோடியாக நடித்தார்.
தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், கன்னடம் என மற்ற மொழிகளில் வெளியான திரைப்படங்களிலும் நடித்திருந்தார்.
இந்த நிலையில் நடிகை மீனா வித்யாசாகர் என்பவை திருமணம் செய்த நிலையில் அவர்களுக்கு நைனிகா என்ற மகளும் உள்ளார். இதனிடையே உடல் நலக்குறைவால் நடிகை மீனாவின் கணவர் உயிரிழந்தார்.
கணவரை இழந்து தவிக்கும் மீனா தனது மகளுடன் வாழ்ந்து வருகிறார். இதனிடையே ஒரு தனியார் டிரஸ்ட் ஒன்றை ஆரம்பித்து நடத்தி வருகிறார்.
ஆசைப்பட்ட மீனாவின் அம்மா
இந்த நிலையில் சினி உலகம் யூடியூப் சேனலுக்கு நடிகை மீனா அளித்த பேட்டியில் பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார்.
அப்போது அவரிடம் நடிகை சுஹாசினி மீனாவின் அம்மாவை நேரில் ஏர்போர்டில் பார்த்த போது உடனே நாளைக்கு மீனாவுக்கு கல்யாணம் பண்ணிடனும் என்று தெரிவித்தார்.
அதற்கு மீனா எங்க அம்மாவுக்கு ஒரு நல்ல இடத்தில் திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என்று ஆசை என்றார்.
முழு பேட்டியை கீழே வீடியோவில் பார்க்கவும்...

Numerology: இந்த தேதிகளில் பிறந்தவங்க லட்சுமி தேவியின் அருள் கொண்டவர்களாம்.. பணம் இனி கொட்டும் Manithan

உச்ச கட்ட பதற்றம் : சற்று முன்னர் ஈரானின் அரசு தொலைக்காட்சி ஒளிபரப்பு தலைமையகத்தை குண்டுவீசி தகர்த்தது இஸ்ரேல் IBC Tamil
