கும்முன்னு பழைய நிலைக்கு திரும்பிய நடிகை மீனா
Meena
Tamil Cinema
By Thahir
கணவரின் இறப்பிற்கு பிறகு நடிகை மீனா தனது பழைய நிலைக்கு திரும்பியுள்ளார்.
வீடியோ வெளியிட்ட மீனா
1990களில் முன்னணி நடிகையாக இருந்தவர் மீனா. இவர் கடைசியாக அண்ணாத்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
சில மாதங்களுக்கு முன்பு நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் உயிரிழந்தார். இவரது உயிரிழப்பால் கடும் சோகத்தில் இருந்து வந்தார் மீனா.
அவருக்கு திரை பிரபலங்கள், நண்பர்கள், மற்றும் ரசிகர்கள் பலரும் ஆறுதல் தெரிவித்து வந்தனர்.
மீனாவின் நெருங்கிய தோழியான கலா மாஸ்டர் அவரை அடிக்கடி நேரில் சந்தித்து ஆறுதலாகவும் இருந்து வந்தார்.
இந்த நிலையில் அனைத்து சோகங்களையும் கடந்து மீனா குதுாகலத்துடன் மாடல் பிட் உடையில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.