என்னால் முடியல... மறுமணமா?... என் மனம் நொறுங்கிவிட்டது... - நடிகை மீனா உருக்கம்...!
மறுமணம் குறித்து பரவும் தகவலுக்கு நடிகை மீனா உருக்கமாக பேசியுள்ளார்.
நடிகை மீனா
தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை மீனா. இவர் குழந்தையிலிருந்து தமிழ் சினிமாவில் நடித்து வருகிறார். நடிகை மீனாவிற்கும், பெங்களூரூவை சேர்ந்த கணிணி பொறியாளர் வித்யாசாகருக்கும் கடந்த 2009 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இத்தம்பதிகளுக்கு நைனிகா என்ற மகள் உள்ளார்.
வித்யாசாகர் மரணம்
நடிகை மீனா தற்போது கோட்டூர்புரம் பகுதியில் உள்ள ஸ்ரீநகர் காலனி அவென்யூவில் வசித்து வருகிறார். சமீபத்தில் மீனாவின் கணவர் வித்யாசகருக்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார்.
இதனையடுத்து, மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட வித்யாசாகருக்கு நுரையீரல் பிரச்சினை ஏற்பட்டது. இதற்கு சிகிச்சை எடுத்துக் கொண்டு வந்த வித்யாசகர் சிகிச்சை பலனின்றி சமீபத்தில் உயிரிழந்தார்.
மீனாவுக்கு மறுமணமா?
கணவர் உயிரிழப்பால் மீனா சோகத்தில் இருந்து வந்தார். தற்போது கொஞ்சம் கொஞ்சமாக அதிலிருந்து மீண்டு வருகிறார். இந்நிலையில், நடிகை மீனாவின் 2வது திருமணம் குறித்த தகவல்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. மீனா குடும்ப நண்பரை திருமணம் செய்ய உள்ளதாக தற்போது தகவல்கள் பரவி வருகிறது.
நடிகை மீனா உருக்கம்
இந்நிலையில், மறுமணம் குறித்து சமூகவலைத்தளங்களில் பரவும் தகவல் குறித்து நடிகை மீனா விளக்கம் கொடுத்துள்ளார்.
இது குறித்து அவர் பேசுகையில்,
என் கணவர் இறந்த துக்கத்திலிருந்தே என்னால் இன்னும் மீண்டு வர முடியவில்லை. அவரோடு வாழ்ந்த நினைவுகளுடனே நாட்களை கழித்து வருகிறேன். இந்த மாதிரியான சூழ்நிலையில் 2வது திருமணம் குறித்து தன்னால் கனவில் கூட நினைத்துப் பார்க்க முடியாது.
2ம் திருமணம் குறித்து பேசி எனக்கு யாரும் மன உளைச்சலை கொடுக்காதீங்க. தற்போது நடிப்பிலும் கதைகளை தேர்வு செய்வதிலும் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறேன். தன்னை பற்றி பரவும் அந்த தகவல்கள் முழுக்க முழுக்க வதந்திதான் என்றார்.
தன் கணவர் மறைவுக்கு பிறகு தன்னுடைய உடல் உறுப்புகளை தானம் செய்துள்ளார் மீனா என்பது குறிப்பிடத்தக்கது.