வாழுங்கள்... நம்மிடம் இருப்பது இந்த நிமிடம் மட்டுமே... - நடிகை மீனா உருக்கம்
நடிகை மீனா தன்னுடைய இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ள வீடியோ பதிவு தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
நடிகை மீனா
தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை மீனா. இவர் குழந்தையிலிருந்து தமிழ் சினிமாவில் நடித்து வருகிறார். நடிகை மீனாவிற்கும், பெங்களூரூவை சேர்ந்த கணிணி பொறியாளர் வித்யாசாகருக்கும் கடந்த 2009 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இத்தம்பதிகளுக்கு நைனிகா என்ற மகள் உள்ளார்.
வித்யாசாகர் மரணம்
நடிகை மீனா தற்போது கோட்டூர்புரம் பகுதியில் உள்ள ஸ்ரீநகர் காலனி அவென்யூவில் வசித்து வருகிறார். சமீபத்தில் மீனாவின் கணவர் வித்யாசகருக்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். இதனையடுத்து, மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட வித்யாசாகருக்கு நுரையீரல் பிரச்சினை ஏற்பட்டது. இதற்கு சிகிச்சை எடுத்துக் கொண்டு வந்த வித்யாசகர் சிகிச்சை பலனின்றி சமீபத்தில் உயிரிழந்தார்.
பிரபலங்கள் இரங்கல்
மீனாவின் கணவர் வித்யாசாகர் உயிரிழப்புச் செய்தியைக் கேட்டு அவரது ரசிகர்களும், சினிமா பிரபலங்களும் இரங்கல் தெரிவித்தனர். அவரது மறைவு திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
நடிகை மீனா வெளியிட்ட போஸ்ட்
இந்நிலையில், இன்ஸ்டாவில் நடிகை மீனா பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தன் சிறு வயதிலிருந்து லேட்டஸ்ட் வரை எடுத்த புகைப்படங்கள் அடங்கிய வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில், வாழ்க்கை ஒரு ரோலர் கோஸ்டர் போன்றது. வாழுங்கள். நம்மிடம் இருப்பது இந்த நிமிடம் மட்டுமே என்று பதிவிட்டுள்ளார்.
இவரின் வீடியோ போஸ்ட்டை பார்த்த ரசிகர்கள், நீங்கள் மீண்டும் இன்ஸ்டாகிராமுக்கு வந்ததில் ரொம்ப சந்தோஷம். நைனிகா எப்படி இருக்கிறார்? ஆண்டவன் உங்களுக்கு துணையாக இருப்பார் என்று ஆறுதல் கூறி கமெண்ட் செய்து வருகின்றனர்.