இவ்வளவு அழகான தெறி பேபி - நடிகை மீனா மகளா இது? ரசிகர்கள் அதிர்ச்சி

daughter photo viral actress meena
By Anupriyamkumaresan Sep 17, 2021 12:06 PM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in பிரபலங்கள்
Report

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்த மீனா தற்போது தன் மகளுடன் இணைந்து போட்டோஷூட் செய்துள்ளார். அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

குழந்தை நட்சத்திரமாக தமிழில் அறிமுகமானவர் தான் பிரபல நடிகை மீனா. தமிழ் மற்றும் தெலுங்கில் 10 படங்களுக்கு மேல் குழந்தை நட்சத்திரமாக பணியாற்றி வந்தார்.

குழந்தை நட்சத்திரமாக இருக்கும் போதே அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருந்தனர். சிவாஜி கணேசனுடன் தான் அவர் அதிகமாக நடித்துள்ளார். அதற்கு மேல் ரஜினியுடன் இரண்டு படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.

இவ்வளவு அழகான தெறி பேபி - நடிகை மீனா மகளா இது? ரசிகர்கள் அதிர்ச்சி | Actress Meena Daughter Photo Viral

அவருக்கு மகளாக நடித்த மீனா நாளடைவில் அவருக்கு ஜோடியாக களமிறங்கினார். முன்னணி நடிகையாக வலம் வந்தார். தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் பல படங்களில் நடித்து வந்தார்.

இப்போழுது நீண்ட நாட்களுக்கு பிறகு அண்ணாத்த படத்தில் ரஜினியுடன் இணைந்து நடிக்கிறார். மேலும் மீனா போலவே அவரது மகள் நைனிகாவும் குழந்தை நட்சத்திரமாக வலம் வருகிறார்.

இவ்வளவு அழகான தெறி பேபி - நடிகை மீனா மகளா இது? ரசிகர்கள் அதிர்ச்சி | Actress Meena Daughter Photo Viral

தெறி படத்தில் விஜயின் மகளாக நடித்தார். அதன் பிறகு பாஸ்கர் ஒரு ராஸ்கல் படத்தில் தான் நடித்தார். அதன் பிறகு எந்த படங்களிலுமே நைனிகாவை பார்க்க முடிவதில்லை.

இந்நிலையில் மீனாவும் நைனிகாவும் இணைந்து போட்டோஷூட் நடத்தியுள்ளனர். நைனிகா இவ்வளவு தூரம் வளர்ந்து விட்டாரா?? என பலரும் ஆச்சரியத்தில் உள்ளனர்.