ரோட்டில் நின்று ஆடை மாற்றிய நடிகை மீனா - உண்மையை சொன்ன பிரபல நடிகர்
நடிகை மீனா படப்பிடிப்பிற்காக ரோட்டில் நின்று ஆடை மாற்றியதாக நடிகர் ராஜ்கிரண் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் கலக்கிய மீனா
ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான அன்புள்ள ரஜினிகாந்த் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை மீனா.
பின்னர் சிறு வயது முதல் தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்து வந்தார். இவர் பல முன்னணி நடிகர்களுடனும் நடித்துள்ளார்.
1991 ஆம் ஆண்டு ஹீரோயினாக நடித்த முதல் திரைப்படம் என் ராசாவின் மனசிலே. இந்த படத்தில் நடிக்கும் போது நடிகை மீனாவுக்கு 15 அல்லது 16 வயது தான் இருக்கும்.
ராஜ்கிரண் ஓப்பன் டாக்
நடிகை மீனாவின் நடிப்பு குறித்து பேசிய நடிகர் ராஜ்கிரண், படத்தில் மட்டும் தான் மீனா என்னை பார்த்து பயந்ததாக பலரும் நினைத்து கொண்டுள்ளனர். ஆனால் நிஜத்திற்கே ரோஜா என்னை பார்த்து வெகுவாக பயந்தார்கள்.
படப்பிடிப்பு துவங்கியது முதல் படம் முடிவு வரை அவர் என்னிடம் பேசவே இல்லை. அதே போல சிறப்பான நடிப்பை வெளிப்படுத்த கூடியவர் மீனா.
எந்த ஒரு சூழ்நிலையிலும் நடிக்க தயாராகிவிடுவார். அப்போதெல்லாம் கேரவான் போன்ற வண்டிகள் கிடையாது. ஒரு முறை பாடலுக்காக ஆடையை மாற்ற வேண்டிய சூழல் இருந்தது.
உடனடியாக ரோட்டோரமாக காரை நிறுத்தி அதன் மறைவிரல் நின்று ஆடையை மாற்றிக்கொண்டு வந்தார் மீனா.
இப்போது உள்ள நடிகைகளிடம் அதையெல்லாம் நாம் எதிர்பார்க்கவே முடியாது அப்படி நடிப்பிற்கு முக்கியத்துவம் கொடுத்தவர் மீனா என கூறியுள்ளார் ராஜ்கிரண்.