'ரஜினி' டென்ஷனாயிட்டார்; அசிஸ்டென்ஸ் எல்லாரும் இருந்தாங்க - நடிகை மீனா வெளிப்படை!
நடிகை மீனா முத்து படத்தில் ரஜினியுடன் நடித்த அனுபவங்கள் குறித்து பேசியுள்ளார்.
நடிகை மீனா
90ஸ்'களில் பலரின் கனவுக் கன்னியாக வளம் வந்தவர் நடிகை மீனா. 1982ம் ஆண்டு குழந்தை நட்சத்திரமாக சிவாஜி நடித்த நெஞ்சங்கள் என்ற திரைப்படத்தின் முதன் முறையாக நடித்தார்.
1990ல் ஒரு புதிய கீதை என்ற தமிழ் படம் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானார். ரஜினி,கமல்,அஜித்,என அனைத்து முன்னணி ஹீரோக்களுக்கும் ஜோடியாக நடித்திருக்கிறார்.தமிழ், தெலுங்கு,கன்னடம், மலையாளம் என அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் நடித்திருக்கிறார்.
தற்போது தமிழ் சினிமாவில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். அண்மையில் பிரபல தமிழ் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ஸ்டார்ட் மியூசிக் என்ற நிகழ்ச்சியில் நடிகை மீனா கலந்து கொண்டார். அப்போது முத்து படத்தில் நடிகர் ரஜினியுடன் நடித்த அனுபவங்கள் குறித்து மீனா பேசியுள்ளார்.
ரஜினி டென்ஷனானார்
மீனா பேசியதாவது "முத்து படத்தில் ரஜினி சார் சிகரெட் தூக்கி போட்டு பிடிக்கும் சீன் எடுத்தார்கள். நான் அதை மற்ற படங்களில் மட்டுமே பார்த்திருக்கிறேன். ஆனால் நேரில் அதை அவர் எப்படி செய்கிறார் என்பதை பார்ப்பதற்கு ஆர்வமாக இருந்தேன்.
அந்த சீனை எடுக்கப் போகிறார்கள் என்று தெரிந்ததும் ஓடிவந்து கேமரா பக்கத்தில் நின்றேன். என்னுடைய அசிஸ்டென்ஸ் எல்லாரும் என்னுடன் இருந்தார்கள். அதைப் பார்த்ததும் ரஜினி சார் சங்கடப்பட்டுவிட்டார். என்ன எல்லாரும் இப்படி நிற்கிறீர்கள்? என்று எங்களிடம் கேட்டார். நான் அப்போது "சார் இது நேரடியாக பார்க்கும் வாய்ப்பு யாருக்காவது கிடைக்குமா என்று கேட்டேன். அப்போது ரஜினி சார் ஒரு மாதிரியாக டென்ஷனாகி, முதல் முறை சிகரெட்டை தூக்கி போட்டு கீழே விழுந்து விட்டது.
அப்போது ரஜினி சார் சொன்னார் "என்னங்க என்னை இப்படி டெங்ஷனாக்கீட்டிங்க. வாழ்க்கையில் நான் இதற்கெல்லாம் டென்ஷணானதே கிடையாது' என்று சொன்னார். அதற்கு பிறகு ரஜினி சார் ரிலாக்ஸ் ஆகி, இரண்டாவது ஷாட்டில் சிறப்பாக அதை செய்தார்" என்று நடிகை மீனா பேசியுள்ளார்.