குழந்தை இருக்கு; இப்போ அத பண்ண முடியாதுனு அவரிடம் சொல்லியும்.. மீனா வேதனை!

Meena Tamil Cinema Tamil Actors Tamil Actress Actress
By Jiyath Jun 02, 2024 02:35 PM GMT
Report

திரிஷ்யம் படத்தில் திரைப்படத்தில் நடித்த அனுபவம் குறித்து நடிகை மீனா பேசியுள்ளார்.

நடிகை மீனா

90ஸ்'களில் பலரின் கனவுக் கன்னியாக வளம் வந்தவர் நடிகை மீனா. இவர் 'ஒரு புதிய கீதை' என்ற படம் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானார். ரஜினி,கமல்,அஜித்,என அனைத்து முன்னணி ஹீரோக்களுக்கும் ஜோடியாக நடித்திருக்கிறார்.

குழந்தை இருக்கு; இப்போ அத பண்ண முடியாதுனு அவரிடம் சொல்லியும்.. மீனா வேதனை! | Actress Meena About Drishyam Movie

மேலும் தமிழ், தெலுங்கு,கன்னடம், மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளிலும் நடித்திருக்கிறார். இவர் மலையாளத்தில் நடிகர் மோகன் லாலுடன் நடித்த திரிஷ்யம் என்ற படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

இந்நிலையில் அந்த படத்தில் நடித்தது குறித்து நேர்காணல் ஒன்றில் மீனா பேசியுள்ளார். அவர் கூறியதாவது "பல நாட்கள் முடித்து எனக்கு கம்பேக் தந்த படம் தான் திரிஷ்யம். அந்த கதை கேட்ட பிறகு எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஆனால் அந்த படத்தின் படப்பிடிப்பு கேரளாவில் இருந்தது.

எய்ட்ஸ் நோய்.. எலும்பு தெரிய தர்கா வெளியில் கிடந்த நடிகை - சோகமான இறுதி நாட்கள்!

எய்ட்ஸ் நோய்.. எலும்பு தெரிய தர்கா வெளியில் கிடந்த நடிகை - சோகமான இறுதி நாட்கள்!

சின்ன குழந்தை

அதனால் நான் அந்த படத்தின் தயாரிப்பாளரிடம் "எனக்கு இப்போது இந்த படம் பண்ண முடியாது ரொம்ப கஷ்டம். ஏனென்றால் எனது குழந்தைக்கு இப்போது தான் 2 வயது. ரொம்ப சின்ன குழந்தை, விட்டுட்டு வரமுடியாது.

குழந்தை இருக்கு; இப்போ அத பண்ண முடியாதுனு அவரிடம் சொல்லியும்.. மீனா வேதனை! | Actress Meena About Drishyam Movie

அதனால் இந்த நேரத்தில் இதை என்னால் பண்ணமுடியாது" என்று தயாரிப்பாளரிடம் நான் சொன்னேன். ஆனால், சரி என்று சொல்லிவிட்டு சென்ற படக்குழு மீண்டும் வந்து, நீங்கள் அல்லாமல் வேறு யாரையும் இந்த கதாபாத்திரத்தின் நினைத்து பார்க்க முடியாது.

நீங்களே பண்ணினால் தான் நன்றாக இருக்கும். உங்களுக்கு என்ன வசதி வேண்டுமானாலும் செய்து தருகிறோம். தயவு செய்து வாங்க" என்று சொன்னார்கள். அப்படிதான் அந்த படத்தை நான் பண்ணினேன்" என்று தெரிவித்துள்ளார்.