எனக்கு கிளாமராக நடிக்க ரொம்ப பிடிக்கும் - நடிகை மீனா ஓபன் டாக் - ஷாக்கான ரசிகர்கள்
சேனல் ஒன்றுக்கு நடிகை மீனா பேட்டி கொடுத்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
நடிகை மீனா
தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை மீனா. இவர் குழந்தையிலிருந்து தமிழ் சினிமாவில் நடித்து வருகிறார். நடிகை மீனாவிற்கும், பெங்களூரூவை சேர்ந்த கணிணி பொறியாளர் வித்யாசாகருக்கும் கடந்த 2009 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இத்தம்பதிகளுக்கு நைனிகா என்ற மகள் உள்ளார்.
வித்யாசாகர் மரணம்
நடிகை மீனா தற்போது கோட்டூர்புரம் பகுதியில் உள்ள ஸ்ரீநகர் காலனி அவென்யூவில் வசித்து வருகிறார். சமீபத்தில் மீனாவின் கணவர் வித்யாசகருக்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். இதனையடுத்து, மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட வித்யாசாகருக்கு நுரையீரல் பிரச்சினை ஏற்பட்டது. இதற்கு சிகிச்சை எடுத்துக் கொண்டு வந்த வித்யாசகர் சிகிச்சை பலனின்றி சமீபத்தில் உயிரிழந்தார்.
பிரபலங்கள் இரங்கல்
மீனாவின் கணவர் வித்யாசாகர் உயிரிழப்புச் செய்தியைக் கேட்டு அவரது ரசிகர்களும், சினிமா பிரபலங்களும் இரங்கல் தெரிவித்தனர். அவரது மறைவு திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
வைரலாகும் மீனா பேட்டி
ஒரு சேனலுக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு பேட்டி ஒன்று கொடுத்துள்ளார். அந்தப் பேட்டி தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அந்தப் பேட்டியில் பேசிய அவர், சினிமாவில் நான் இத்தனை ஆண்டுகள் இருப்பேன் என்று கொஞ்சம் கூட நினைக்கவில்லை. என் குடும்பத்தில் யாரும் சினிமாவை சேர்ந்தவர்கள் கிடையாது. இந்த பெரிய பயணத்திற்கு காரணம் என் அம்மாதான். நான் என் அம்மா சொல்படி தான் கேட்டேன்.
எனக்கு உலகமே என்ன என்பது தெரியாது. திருமணத்திற்கு பிறகு தான் நான் உலகத்தை கொஞ்சம் கொஞ்சமாக கற்றுக் கொள்ள ஆரம்பித்தேன். முதலில் எனக்கு மகேஸ்வரிதான் நெருங்கிய தோழியாக இருந்தார். பின்பி குஷ்பூ, சங்கவி, ரோஜா போன்றவர்களுடன் எனக்கு நல்ல நட்பு ஏற்பட்டது.
இப்போதுவரை அந்த நட்பு நீடித்து வருகிறது. எனக்கு கிளாமராக நடிக்க ரொம்ப பிடிக்கும். ஆனால், எனக்கு குடும்பப்பாங்கான ரோல்கள்தான் அதிகம் கிடைத்தது. தாவணி பாவாடை, கிழிந்த புடவை என இந்த உடைகளைதான் எனக்கு தருவார்கள்.
இதனால் எனக்கு கிளாமர் நடிகைகளை பார்த்தாலே பொறாமையாக இருக்கும் என்று கலகலப்புடன் கூறியுள்ளார்.
தற்போது இது குறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.