மகள், மருமகன் முன்னிலையில்.. 51 வயதில் 2வது திருமணம் செய்த பிரபல நடிகை!
பிரபல நடிகை ஒருவர் 51 வயதில் தனது இரண்டாவது திருமணத்தைச் செய்துள்ளார்.
நடிகை ஜவேரியா அப்பாஸி
பாகிஸ்தானைச் சேர்ந்தவர் நடிகை ஜவேரியா அப்பாஸி. பிரபல தொலைக்காட்சிகளின் சீரியல்களில் நடித்து பிரபலமானார். தற்போது வரை பல சீரியல்களில் முன்னணி வேடத்தில் நடித்துள்ளார்.
இவர் தனது உறவினரான ஷாமூன் அப்பாசி என்பவரை திருமணம் செய்தார். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். சுமார் 13 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்த இவர்கள் 2010ல் விவாகரத்து செய்தனர்.
2வது திருமணம்
தொடர்ந்து நண்பரின் வீட்டு விருந்துக்குச் சென்றபோது தொழிலதிபரான அதீல் ஹைதர் என்பவரைச் சந்திக்க அவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அது நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இதனையடுத்து இருவரும் திருமணம் செய்ய முடிவெடுத்தனர்.
இதற்கிடையில் 27 வயதான மகளுக்குத் திருமணம் செய்து வைத்தார். தற்போது ஜவேரியா 51 வயதில் இரண்டாவது திருமணம் செய்துகொண்டார்.
தனது மகள், மருமகன், மகளின் மாமியார், தனது மாமியார் ஆகியோர் முன்னிலையில் இந்த திருமணம் நடைபெற்றுள்ளது. தற்போது லண்டனில் வசித்துவரும் இருவரும் தங்களது புகைப்படங்களை சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து வருகின்றனர்.