நள்ளிரவில் ஹீரோ சொன்னா அத பண்ணனும்; இல்லனா இதுதான் நடக்கும் - கமல் பட நடிகை கதறல்!
சினிமாவில் தனக்கு நடந்த சில கசப்பான அனுபவங்கள் குறித்து நடிகை மல்லிகா ஷெராவத் பேசியுள்ளார்.
மல்லிகா ஷெராவத்
பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வளம் வருபவர் நடிகை மல்லிகா ஷெராவத். 'க்வாஹிஷ்' என்ற திரைப்படம் மூலம் அறிமுகமான இவர், 20 படங்களுக்கும் மேல் நடித்துள்ளார்.
தமிழில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான தசாவதாரம் படத்தில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சிம்புவுடன் சேர்ந்து ஒஸ்தி படத்தில் ஒரு பாடலில் நடனமாடியுள்ளார். மல்லிகா ஷெராவத் அளித்த பேட்டி ஒன்றில், காஸ்டிங் கவுச் (casting couch) மூலம் தான் நிறைய படங்களை தவற விட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது "படத்தின் ஹீரோவுடன் சமரசம் செய்துகொள்ளாவிட்டால் அந்த படத்திலிருந்து விலக வேண்டிய சூழல் தான் உள்ளது. பாலிவுட் சினிமாவின் இது பரவலாக நடைபெற்று வருகிறது.
வேதனை
நான் ஒரு படத்தில் நடிக்கிறேன் என்றால் அந்த படத்தின் ஹீரோ என்னை இரவு 3 மணிக்கு அவரது வீட்டிற்கு வருமாறு அழைத்தாலும் நான் போக வேண்டும்.
இல்லையென்றால் அந்த படத்திலிருந்து என்னை நீக்கி விடுவார்கள். இந்த மோசமான செயல் என்னை அதிகமாக பாதித்தது. ஹீரோக்களுடன் சமரசம் செய்துகொள்ள மறுத்ததாலே எனக்கு நிறைய படங்கள் கைவிட்டு போயின.
என்னிடம் 65 ஸ்கிரிட்ப்கள் இருந்தன. ஆனால் நான் ஹீரோக்களுடன் ஒத்துழைக்கவில்லை என்பதால் அதில் ஒரு படத்தில் கூட நான் நடிக்கவில்லை" என்று தெரிவித்துள்ளார்.