அலட்சியமாக இருக்க வேண்டாம் - மருத்துவமனையில் பிரபல நடிகை
நடிகை மாளவிகா அவினாஷ் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மாளவிகா அவினாஷ்
மாதவன் நடித்த 'ஜே ஜே' படத்தில் கதாநாயகியின் சகோதரியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் மாளவிகா அவினாஷ். தொடர்ந்து பைரவா, கைதி, கே.ஜி.எஃப் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
தொடர்ந்து பாஜகவில் இணைந்து அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
உடல்நலக் குறைவு
அதில், "உங்களில் யாருக்காவது ஒற்றை தலைவலி பிரச்சனை இருந்தால் அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டாம். அப்படி எடுத்துக் கொண்டால் என்னை போன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவீர்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
அதற்கு அவரது ரசிகர்களும், பிரபலங்களும் விரைவில் குணம் பெற ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

முள்ளிவாய்காலின் இறுதிக் கணங்கள் : மனதை உறையவைக்கும் காட்சிகள் (வயது வந்தவர்களுக்கு மட்டும்) IBC Tamil

ஈழத்தில் நடந்தது இனப்படுகொலை ஆதாரமாக உலகை உலுக்கிய No fire zone தமிழில் (கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும்) IBC Tamil
