இயக்குநரை ரகசிய திருமணம் செய்த பிரபல நடிகை
இயக்குநர் சார்லி மெக்டாவலை பிரபல ஹாலிவுட் நடிகை லில்லி காலின்ஸ் ரகசியமாக திருமணம் செய்துள்ளார்.
பிரபல இசைக் கலைஞரான ஃபில் காலின்ஸின் மகளான நடிகை லில்லி காலின்ஸ் The Blind Side படம் மூலம் ஹாலிவுட்டில் அறிமுகமானார்.
தொடர்ந்து படங்கள், தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வரும் அவர் அமெரிக்காவை சேர்ந்த திரைப்பட இயக்குநரான சார்லி மெக்டாவலை ரகசிய திருமணம் செய்துள்ளார்.
திருமணத்தின்போது எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு தான் திருமதியாகிவிட்டதாகவும், செப்டம்பர் 4 ஆம் தேதி அன்று நாங்கள் சட்டப்படி திருமணம் செய்து கொண்டோம்.
இதற்கு முன்பு இந்த அளவுக்கு சந்தோஷமாக இருந்தது இல்லை என்றும் தெரிவித்துள்ளார். இந்த நட்சத்திர தம்பதியினருக்கு திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.