பிரபல நடிகை மருத்துவமனையில் அனுமதி - ரசிகர்கள் அதிர்ச்சி
பிரபல குணச்சித்திர நடிகையான கேபிஏசி லலிதா உடல்நல கோளாறால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள தகவல் வெளியாகி ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியை கொடுத்துள்ளது.
பிரபல இயக்குநர் பரதனின் மனைவி கேபிஏசி லலிதா. கேரள உலகில் சிறந்த குணச்சித்திர நடிகை. இரண்டு முறை தேசிய விருது பெற்றவர். தமிழ் சினிமாக்களில் அம்மா வேடங்களில் சிறப்பாக நடித்தவர்.
அவருக்கு தற்போது உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டு இருப்பதால் கொச்சியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவ பரிசோதனையில் கல்லீரலில் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது.
அவரது உடல்நிலையை மருத்துவர்கள் குழு தீவிரமாக கண்காணித்து வருகிறது. 5 தலைமுறை நடிகர்களுடன் நடித்துள்ள கேபிஏசி லலிதாவின் உடல்நிலை பூரண குணம் அடைய வேண்டும் என்று திரையுலகத்தினரும், ரசிகர்களும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.