24 வயது பிரபல இளம் நடிகை மாரடைப்பால் மரணம் - அதிர்ச்சியில் திரையுலகம்!
நடிகை லக்ஷ்மிகா சஜீவன் மாரடைப்பால் உயிரிழந்துள்ள சம்பவம் மலையாள திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லக்ஷ்மிகா சஜீவன்
மலையாள திரையுலகில் தனது சிறப்பான நடிப்பால் பிரபலமானவர் நடிகை லக்ஷ்மிகா சஜீவன் (24). இவர் புழையம்மா, சவுதி வெள்ளக்கா’, உயரே, ஒரு யமந்தன் பிரேமகதா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
கடந்த 2021ம் ஆண்டு வெளியான 'காக்கா' என்ற குறும்படத்தில் பஞ்சமி எனும் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்ததன் மூலம் லக்ஷ்மிகா, ரசிகர்கள் பலரையும் கவர்ந்தார். கடைசியாக ‘கூன்’ என்ற படத்தில் இவர் நடித்திருந்தார்.
மாரடைப்பால் மரணம்
இந்நிலையில் துபாயின் ஷார்ஜாவில் உள்ள வங்கி ஒன்றில் வேலைப் பார்த்துக் கொண்டிருந்த லக்ஷ்மிகா சஜீவன் மாரடைப்பால் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரின் இறப்பு ரசிகர்கள் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
மேலும், இளம் நடிகை மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் மலையாள திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பலரும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் "இருளையும் தாண்டிய ஒளி நம்பிக்கை கொடுக்கும்" என்ற லக்ஷ்மிகாவின் இறுதி இன்ஸ்டாகிராம் பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.