சட்டப்படி 3 கணவன்; அப்புறம் தான் தெரியும் - பிரபல நடிகை குறித்த ஷாக் தகவல்!
நடிகை லட்சுமி மூன்று திருமணங்கள் செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
நடிகை லட்சுமி
தமிழ் சினிமாவில் உச்ச நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை லெட்சுமி. அத்தனை காதாபாத்திரங்களுக்கு பொருந்திப் போய் நடிக்கும் இவரது ஆற்றல் தனி ரசிகர் பட்டாளத்தை உண்டாக்கியது.
இந்நிலையில் இவர் குறித்து, ‘‘நடிகை லட்சுமி, மோகன் என்பவரை பிரிவதற்கு முன்பே லட்சுமிக்கு திருமணம் ஆகியிருந்தது. பாஸ்கர் என்கிற சேலத்துக்குக்காரரை தான் லட்சுமி முதலில் திருமணம் செய்தார். லட்சுமி உச்சகட்ட நடிகையாக இருந்த போது பாஸ்கர், அவரை திருமணம் செய்து கொண்டார்.
3 திருமணம்
பாஸ்கருக்கு பிறந்தது தான் ஐஸ்வர்யா. அதன் பின் இருவரும் பிரிந்துவிட்டார்கள். பாஸ்கர் சேலத்திலேயே இருந்துவிட்டார். அதன் பின் மோகனை திருமணம் செய்து கொண்டார் லட்சுமி. மோகனுக்கு அப்புறம் சிவச்சந்திரன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
சட்டப்படி லட்சுமிக்கு மொத்தம் 3 கணவன்கள். இப்போது, ஐஸ்வர்யா லட்சுமி உடன் இல்லை. தி நகரில் உள்ள அப்பா பாஸ்கரின் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று உள்ளது. அங்கு தான், தன்னுடைய மகளுடன் ஐஸ்வர்யா இருக்கிறார் என சினிமா விமர்சகர் பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.

Brain Teaser Maths: சிந்திப்பால் எதையும் தாங்கும் சக்தி கொண்டவரால் தீர்க்க முடியும் புதிர் உங்களால் முடியுமா? Manithan
