லட்சுமி மேனன் தலைமறைவு; தோழியுடன் சேர்ந்து ரகளை - வெளியான வீடியோ!
பாரில் ஏற்பட்ட சண்டை சர்ச்சையில் சிக்கி நடிகை லட்சுமி மேனன் தலைமறைவாக உள்ளார்.
நடிகை லட்சுமி மேனன்
கேரளாவின் கொச்சி பேனர்ஜி சாலையில் இருக்கும் இரவு நேர சொகுசு பார் ஒன்றில் நண்பர்களுடன் நடிகை லட்சுமி மேனன் சென்றுள்ளார்.
அங்கு லட்சுமி மேனன் குரூப்பிற்கும், மற்றொரு இளைஞர்கள் குரூப்பிற்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. பின் லட்சுமி மேனனின் நண்பர்களான மிதுன்,
ஷாக் வீடியோ
அனீஸ் இருவரும், லட்சுமி மேனனிடம் சண்டை போட்ட ஐடி இளைஞரை காரில் தூக்கிப்போட்டு, காருக்குள் வைத்து அவரை அடித்து, போகும் வழியில் நடு ரோட்டில் தள்ளிவிட்டதாக பாதிக்கப்பட்ட நபர் புகாரளித்திருக்கிறார்.
கேரள மாநிலம் கொச்சியில் ஐ.டி ஊழியர் ஒருவரிடம், தனது நண்பர்களுடன் சேர்ந்து நடிகை லட்சுமி மேனன் பார் முன்பு சண்டையிடும் காட்சி வெளியாகியுள்ளது. #LakshmiMenon pic.twitter.com/ifMcNjBYWa
— Idam valam (@Idam_valam) August 27, 2025
அதன் அடிப்படையில், லட்சுமி மேனன், மிதுன், அனீஸ் உள்ளிட்டோரின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இதில் மிதுன், அனீஸ் இருவரும் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.
லட்சுமி மேனன் தலைமறைவாக இருப்பதாகக் கூறப்படுகிறது. போலீஸார் அவரை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுதொடர்பான வீடியோ வெளியாகி வேகமாக பரவி வருகிறது.